கிறிஸ் பிரென்டிஸ் எழுதிய நூல் – ஜென்: தத்துவமும் மகிழ்ச்சியும் வாழ்க்கையும்.
நாகலட்சுமி சண்முகம் மொழிபெயர்ப்பில் மஞ்சுல் பதிப்பக வெளியீடாக தமிழில் வெளிவந்திருக்கிறது.
ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்கவேண்டிய நூல் என்று லைப்ரரி ஜெர்னல் என்ற பத்திரிகை பாராட்டியுள்ளது.
எதிர்பார்ப்புகள், பழக்கங்கள், கண்ணோட்டங்கள் ஆகியவற்றில் மாற்றங்களைச் செய்துகொள்ள விரும்புகின்றவர்களுக்கான ஒரு கையேடு.
அதிலிருந்து சில நம்பிக்கை வார்த்தைகள்…!
நிரந்தர மகிழ்ச்சியை அடைவதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. மகிழ்ச்சியாக இருப்பதுதான் அது.
உங்கள் வாழ்நாள் நெடுகிலும் நீங்கள் மேற்கொண்டு வந்துள்ள பல தொடர்ச்சியான தீர்மானங்கள் உங்களை இன்று இந்த நிலைக்குக் கொண்டுவந்து சேர்த்துள்ளன.
நீங்கள் சில அடிப்படையான மாற்றங்களைச் செய்யவேண்டும். அகரீதியான சில மாற்றங்களை நீங்கள் மேற்கொள்ளவேண்டும்.
பேருண்மை எப்போதும் உங்கள் கைக்கெட்டும் தூரத்தில்தான் இருக்கிறது.
உங்களுக்கு நிகழ்கின்ற ஒவ்வொரு நிகழ்வும் மிகவும் அற்புதமானது என்றும், இதைவிட ஓர் அற்புதமான விஷயம் உங்களுக்கு நிகழ வாய்ப்பில்லை என்பதுபோல நீங்கள் நடந்துகொள்ள வேண்டும்.
பிரபஞ்ச விதிகளையும் பிரபஞ்சத்துடனான நம்முடைய உறவையும் புரிந்துகொள்ளுவதன் மூலமாக அடையப்படுகின்ற மகிழ்ச்சிதான் உண்மையான மகிழ்ச்சியாகும்.
ஒரு விஷயம் நிகழும்போது அது மோசமானது என்பதுபோல தோன்றச் செய்யக்கூடிய தகுதியை நாம்தான் அதற்குக் கொடுக்கிறோம்.
நீங்கள் தேடிக்கொண்டிருக்கும் விடைகள் வெளியே எங்கும் இல்லை. அவை உங்களுக்குள்தான் உறங்கிக்கொண்டிருக்கின்றன.
உங்கள் நடத்தையை நேர்மறையான பாதைக்கோ அல்லது எதிர்மறையான பாதைக்கோ நீங்கள் திருப்பிவிடுகிறீர்கள்.
நீங்கள் எந்தவொரு சூழ்நிலையைப் பற்றி கவலைப்படுகிறீர்களோ, பின்னாளில் அது பெரும்பாலும் உங்களுக்கு நன்மையையே கொண்டுவரும்.
எல்லாமே அதற்குரிய நேரத்தில்தான் வருகிறது. அந்த உரிய நேரம் வரும்வரை நீங்கள் உங்கள் பணித்திட்டத்தை முன்னோக்கி எடுத்துச் செல்லவேண்டியது மட்டுமே முக்கியம்.
நமக்கு நிகழுகின்ற அனைத்தும் நம்முடைய மாபெரும் நன்மைக்காகவே நிகழுகின்றன
மிகக் கடினமான சூழ்நிலைகளை நீங்கள் திறமையாகச் சமாளிப்பீர்கள் என்பதோடு, ஒரு புன்னகையுடன் அதிலிருந்து வெளிவருவீர்கள் என்பதும் உறுதி.
உங்கள் சொந்த மனத்தைக் கட்டுப்படுத்துவதில்தான் மேன்மைத்துவம் அடங்கியுள்ளது.
நீங்கள் நம்புகின்ற விஷயங்களும் சாத்தியம்தான் என்று நம்புகின்ற மக்கள் உங்களைச் சூழ்ந்திருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.
-பா. மகிழ்மதி
22.01.2022 10 : 50 A.M