கொரோனா பரிசோதனை யார் யாருக்கு தேவையில்லை?

கொரோனா பரிசோதனை குறித்து, சுகாதாரத்துறை புதிய வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

பரிசோதனை செய்ய வேண்டியவர்கள்l

காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத் திணறல், உடல் வலி உள்ளோர்.

கொரோனா தொற்றுள்ளோருடன் தொடர்பில் இருந்த, இணை நோய் உள்ளோர் அல்லது 60 வயதுக்கு மேற்பட்டோர்.

வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருவோர்.

பரிசோதனை தேவை இல்லாதோர்l

கொரோனா தொற்றுடன் தொடர்பில் இருந்து, அறிகுறிகள் இல்லாதோர்l

இணை நோய் இல்லாதோர் மற்றும் இளம் வயதினர்l பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோர்.

பரிந்துரை

வீட்டுத் தனிமையில் உள்ள தொற்று பாதிக்கப்பட்டோருக்கு அறிகுறிகள் ஏற்பட்டதற்கு, ஏழு நாட்களுக்குப் பின் அல்லது சளி மாதிரிகள் கொடுத்து ஏழு நாள் கடந்த நிலையில், சம்பந்தப்பட்டவர்களை வீட்டுத் தனிமையை நிறைவு செய்து கொள்ள அறிவுறுத்தலாம்.

வீட்டுத் தனிமையை நிறைவு செய்தோர் மீண்டும் ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனை மேற்கொள்ளத் தேவையில்லை.

மருத்துவமனையில் உள்ள கொரோனா நோயாளிகளை, அவர்களது உடல் நிலையைப் பொறுத்து வீட்டுக்கு அனுப்பலாம்.

You might also like