பேருந்தில் வன்முறை: ஓட்டுநர், நடத்துனருக்கு அதிகாரம்!

பேருந்துகளில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறையை தடுப்பதில் ஓட்டுநருக்கு உள்ள பொறுப்புகளை தமிழக அரசு வரையறுத்து வரைவு சட்டத் திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. இது தற்போது அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, பேருந்தில் பயணிக்கும் ஆண் பயணி ஒருவர், பெண் பயணிகளுக்கு எதிராக பாட்டு பாடியும், விசில் அடித்தும், அருவருக்கத்தக்க வார்த்தைகளை பேசியும், கைபேசியில் வீடியோ, போட்டோ எடுத்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டால், ஓட்டுநர் அருகில் உள்ள காவல்நிலையத்துக்குக் கொண்டு சென்று, தொடர்புடையவர் மீது புகார் அளிக்க முடியும்.

சரியான காரணங்கள் இருப்பின், வாகனத்தை விட்டு கீழே இறக்கிவிட ஓட்டுநர், நடத்துனருக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது.

பேருந்தில் பெண்களுக்கு எதிரான சம்பவங்கள் தொடர்பாக புகார் தெரிவிக்க ஏதுவாக பேருந்துகளில் புகார் புத்தகம் வைக்கப்பட வேண்டும் என, திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன.

இவ்வாறு திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இது தொடர்பான ஆட்சபனை மற்றும் கருத்துகளை, தலைமைச் செயலகத்தில் உள்ள உள்துறை செயலருக்கு தெரிவிக்கலாம் என்றும் அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

24.12.2021 12 : 30 P.M

You might also like