அமெரிக்க ஆய்வகத்திற்குச் செல்லும் கீழடி கரிமப் பொருட்கள்!

சிவகங்கை மாவட்டம் கீழடியில், மத்திய தொல்லியல் துறை நடத்திய அகழாய்வில் கிடைத்த கரிமப் பொருட்களை ஆய்வு செய்ய, தமிழக தொல்லியல் துறை நிதியுதவி செய்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் கீழடியில், மத்திய தொல்லியல் துறை சார்பில், அமர்நாத் ராமகிருஷ்ணன், ஸ்ரீராமன் ஆகியோர் அகழாய்வு செய்தனர். அதில், 70-க்கும் மேற்பட்ட கரிமப் பொருட்கள் கிடைத்தன.

பின், மத்திய தொல்லியல் துறை அனுமதி அளிக்காததால், தமிழக தொல்லியல் துறை அகழாய்வு செய்து வருகிறது.

தற்போது, கீழடி அகழாய்வு அறிக்கை தயாரிக்கும் பணியில், மத்திய – மாநில தொல்லியல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், மத்திய தொல்லியல் துறையால் செய்யப்பட்ட அகழாய்வில் கிடைத்த கரிமப் பொருட்களை, அமெரிக்காவின் பீட்டா ஆய்வகத்துக்கு அனுப்பி, அதன் காலத்தை அறிவதில் மத்திய அரசு சுணக்கம் காட்டியது.

இதையடுத்து, தமிழக தொல்லியல் துறை, கீழடி கரிமப் பொருட்களை, ‘கார்பன் டேட்டிங்’ எனும் கரிமப் பகுப்பாய்வு செய்ய அனுமதி அளித்தால் நிதியுதவி செய்வதாக கூறியது.

அதற்கு, மத்திய தொல்லியல் துறை சம்மதித்துள்ளது. விரைவில் கீழடி கரிமப் பொருட்கள் அமெரிக்க ஆய்வகத்துக்குச் செல்ல உள்ளன.

You might also like