குடிசை மாற்று வாரியத்தின் செயல்பாடுகளில் புயல்வேகம்!

புரட்சித் தலைவரின் பொற்கால ஆட்சி சாதனைகள் – 6

தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம் 1971ல் துவங்கப்பட்டு கீழ்க்கண்ட திட்டங்களை சென்னை நகரில் மட்டும் செய்து வந்தது.

1) வீட்டு வசதி

2) குடியிருப்புகள் கட்டும் திட்டம்

3) நகர்ப்புற வளர்ச்சி

விரைவுப்படுத்தப்பட்ட மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அபிவிருத்தித் திட்டம்.

சென்னைப் பெருநகர் மேம்பாட்டுத் திட்டம்

1983-84 ஆம் ஆண்டில் இருந்து குடிசைப்பகுதி மாற்று வாரியம், தன் பணிகளை மாநிலத்தின் பிற நகரங்களுக்கும் படிப்படியாக விரிவாக்கியது. 1986 வரை 43 நகரங்களுக்குப் பணிகள் இவ்வாறு விரிவுபடுத்தப்பட்டது.

குடியிருப்புகள் கட்டும் திட்டம்

1984-85 முடிய குடிசைப் பகுதிமாற்று வாரியம் 45,980 குடியிருப்புகளை ரூ. 4168.69 இலட்சம் செலவில் சென்னை நகரிலும், ஈரோட்டிலும் கட்டியுள்ளது. இத்திட்டத்திற்கு அரசு மானியமும் அட்கோ கடன் உதவியும் பெறப்பட்டது.

1985-86 ஆம் ஆண்டு ரூ.150 இலட்சம் அரசு நிதி உதவியுடனுடம் ரூ.188 இலட்சங்கள் அட்கோ கடனுதவியுடனும் 512 குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டது.

1986-87ல் ரூ.200 இலட்சம் அரசு மானியம் பெற்றும் ரூ. 585 இலட்சம் அட்கோ கடனுதவி பெற்றும் 3570 குடியிருப்புகள் கட்டிமுடிக்கப்பட்டது. ரூ.100 இலட்சம் கடன் தொகை அட்கோவிற்குத் திருப்பிச் செலுத்தப்பட்டது. நலிந்த பிரிவினருக்கான வீடு கட்டும் திட்டத்தின் கீழ் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ள குடிசைவாசிகளுக்கு வீடுகள் கட்டித் தரப்பட்டது.

அந்தந்தப் பகுதிகளில் கிடைக்கும் விலை குறைந்த தரமான – கட்டுமானப் பொருள்களைக் கொண்டு வீடுகள் கட்டப்பட்டது. 1985-86ல் மதுரை பெரியார் நகரில் ரூ. 231.931 இலட்சம் அட்கோ கடன் உதவியுடன் 2010 வீடுகள் கட்டப்பட்டது.

நலிந்தோர், உயர்ந்தோருக்கு 30 இலட்சம் வீடுகள்

எம்.ஜி.ஆர். அரசின் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் முதல் உயர்தர வருவாய்ப் பிரிவினர் வரை உள்ள பல்வேறு பிரிவினர்க்கு ஏற்றவாறு வீட்டுவசதித் திட்டங்களைச் செயல்படுத்தி வந்தது.

1987 வரை 1 லட்சத்து 47ஆயிரத்து 710 குடியிருப்புகள் ரூ.409 கோடி செலவில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

அன்றைய காலகட்டத்தில் உள்ள கோட்பாட்டின்படி குடியிருப்புத் திட்டங்களில் 55 விழுக்காடுகள் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் மற்றும் குறைந்த வருவாய்ப பிரிவினருக்கான குடியிருப்புகளாக கட்டப்பட்டது

நலிந்த பிரிவினருக்கு ஒரு நல்ல திட்டம்

பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான திட்டத்தின் படி கைவினைஞர்கள், நெசவாளர்கள். சலவைத் தொழிலாளர்கள், மீனவர்கள் மற்றும் மாத வருவாய் ரூ.700க்குள் பெறும் மக்கள் பயனடைந்தனர். அதிகபட்ச மதிப்பீடு ரூ. 15,000 ஆகும்.

இத்திட்டத்திற்கான நிதியுதவி அட்கோ நிறுவனத்திலிருந்து பெறப்பட்டது. மேலும் மனை மற்றும் மேம்பாட்டுப் பணிகள் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர்க்காக உலக வங்கியின் நிதியுதவியுடன் தமிழக அரசு மூலம் செயல்படுத்தப் பட்டது.

இத்திட்டத்தின் கீழ் 5201 குடியிருப்புகள் கட்டப்பட்டன. ரூபாய்.5.50 கோடி இதற்கு செலவாகியது. வாரியம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து 1977 வரை 1987 வரை, 41,332 குடியிருப்புகள் ரூ. 47 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளன.

குறைந்த வருவாய் பிரிவினர்க்கான குடியிருப்புத் திட்டம்- மாத வருமானம் ரூ. 701 முதல் ரூ.1500 வரை பெறும் மக்களுக்காகச் செயல்படுத்தப்பட்டு வந்தது. இத்திட்டத்தின் படி ஒரு வீட்டின் அதிகபட்ச செலவு ரூபாய் 30,000 ஆகும்.

இத்திட்டம் அட்கோ நிதியுதவியின் மூலம் செயல்படுத்தப்பட்டு வந்தது. வீட்டுவசதி வாரியம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து 1977 வரை 7514 குடியிருப்புகள் ரூ. 15 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டன. 1977 முதல் 1987 வரை 19,824 குடியிருப்புகள் ரூ.30 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளன.

அங்கீகாரம் பெறப்பட்டுள்ள நகர்ப்புற மனைகளில் குடியிருப்புகளைக் கட்டிக்கொள்வதற்காக அம்மனைகளின் சொந்தக்காரர்களுக்குப் பண உதவி வழங்கும் திட்டம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் தொடங்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் பெரும்பாலும் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர்க்காக செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் படி கடனை எளிய தவணை முறையில் திருப்பிச் செலுத்த முடியும்.

ரூ.86 கோடி செலவு

எனவே, மேற்கூறிய திட்டங்களின்படி 1977 வரை தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் வாரியம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து ஏழை மக்களுக்காக 29163 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.

1977 முதல் 1987 வரை வாரியத்தால் 57806 குடியிருப்புகள் ரூ.86 கோடி மதிப்பீட்டில் ஏழை மக்களுக்காகக் கட்டப்பட்டுள்ளன.

ஏழை எளிய மக்களுக்காக சுமார் 30 இலட்சம் குடியிருப்புகளை அமைக்க எம்.ஜி.ஆரின் தமிழ்நாடு அரசு திட்டமிட்டிருந்தது. இதை நிறைவேற்ற தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் பல்வேறு திட்டங்களைத் தீட்டி வந்தது.

ஏழை எளிய மக்களுக்காகக் குடியிருப்புகளைப் பெருக்கும் நோக்கத்துடன் தமிழ்நாடு முழுவதும் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் மற்றும் குறைந்த வருவாய்ப் பிரிவினருக்காக குடியிருப்புகளை அமைக்க தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் முனைந்து செயல்பட்டது.

அதன் பயனாக, பின்வந்த மூன்று ஆண்டில் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்காக 47,060 குடியிருப்புகளையும், குறைந்த வருவாய்ப் பிரிவினருக்காக 5,212 குடியிருப்புகளையும் தமிழகம் முழுவதும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் கட்டி முடித்தது. எம்.ஜி.ஆரின் லட்சிய கனவு இதன் மூலம் நிறைவேற்றி முடிக்கப்பட்டது எனலாம்.

தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் 6 திட்டங்கள்

எம் ஜி. ஆரின் அரசின் “தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம்” ஆறு வகையான திட்டங்களைச் சென்னை மற்றும் பிற நகரங்களில் செயல்படுத்தி முடித்தது.

அதன் விவரம்.

(1) குடியிருப்புகள் கட்டும் திட்டம்

(2) விரைவுப்படுத்தப்பட்ட மேம்பாட்டுத் திட்டம்

(3) உலக வங்கி உதவியுடன் சுற்றுப்புற மேம்பாட்டுத் திட்டம்

(4) வீடற்றோருக்கு வீடு வழங்கும் திட்டம்

(5) பெருமளவில் வீடு கட்டும் திட்டம்.

கடந்த பத்து ஆண்டுகளில் 1977 முதல் 1987 வரை 19,050 குடியிருப்புகள் ரூ. 1970.51 இலட்சங்கள் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

1987-88ம் ஆண்டில் ரூ.200 இலட்சங்கள் செலவில் மேலும் 1000 குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டன.

கட்டி முடிக்கப்பட்ட குடியிருப்புகள் தகுதி வாய்ந்த குடிசைவாசிகளுக்கு மாதவாடகை ரூ. 20க்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தவணை முறை விற்பனைத் திட்டத்தின் கீழ் குடியிருப்பைப் பெற விரும்பும் குடிசைவாசிகளிடமிருந்து மாதாந்திரத் தவணைத் தொகை ரூ. 30 முதல் ரூ. 45 வரை 20 ஆண்டுகளுக்கு வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்படும் குடும்பங்களிடமிருந்து ஏற்கெனவே முடிவு செய்தபடி, முன் பணத்தொகை ஏதும் பெறப்படவில்லை.

– சைதை சா.துரைசாமியின் ‘புரட்சித்தலைவரின் பொற்கால ஆட்சி சாதனைகள்’ நூலிலிருந்து…

You might also like