“சென்னைக்குக் குடிநீர் ஆதாரங்களாக இருக்கும் ஏரிகள் தங்களது கொள்ளளவை எட்டிவிட்டன. இதன் காரணமாக, முன்னறிவிப்புடன் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அறிவிப்புகள் இன்றி மாநகர எல்லைக்குள் ஓடும் ஆறுகளில் தண்ணீரை வெளியேற்றியதன் காரணமாக மக்கள் பெரும் அவதிக்குள்ளான அனுபவங்கள் இனி எப்போதும் அமையாது என்று நம்புவோம்.
ஆனால் ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிவரும்போது, குடியிருப்புப் பகுதிகளிலிருந்து செல்லும் மழைநீர் வடிகால்களிலிருந்து தண்ணீர் ஆற்றுக்குள் இறங்குவதில்லை.
எனவே தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்றுவது மேலும் சிக்கலாகிறது. தண்ணீர் தேங்கி நிற்பதால், பாதுகாப்புக் காரணங்களுக்காக மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்குவதோடு சுகாதாரக் கேடுகள் ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயங்களும் காத்திருக்கின்றன.
அரசின் பல்வேறு துறைகளும் ஒன்றிணைந்து மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளால் நிலைமை ஒன்றிரண்டு நாட்களில் சரியாகிவிடும், என்றாலும் அரசின் திட்டமிடல்கள் எதிர்பாராத பெரு மழையையும் எப்போதும் கணக்கில் கொள்ள வேண்டும்.”
-“சென்னையில் தொடர்மழை உணர்த்தும் பாடங்கள்” – என்ற தலைப்பில் இந்து தமிழ் திசை நாளிதழில் (நவம்பர் 8) எழுதப்பட்ட தலையங்கத்தில் இருந்து ஒரு பகுதி.
நன்றி: இந்து தமிழ் நாளிதழ்