தொடர்ந்து அதிகரிக்கும் குழந்தைகள் தற்கொலை!

சமீப காலங்களில் குழந்தைகள் கடத்தல், குழந்தைகள் பாலியல் அத்துமீறல் உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் உலக நாடுகளில் அதிக அளவில்  நடைபெறுகின்றன.

இதனால் குழந்தைகள் பலர் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குழந்தைகள் தற்கொலை செய்து கொள்வது குறித்து இந்திய தேசிய குற்றவியல் ஆவண புள்ளிவிவர ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“கடந்த 2018 ஆம் ஆண்டு 9 ஆயிரத்து 413 குழந்தைகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 2019ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 18 சதவீதம் அதிகரித்து 9 ஆயிரத்து 613 குழந்தைகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

2020ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து 11,396 குழந்தைகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

2021 ஆம் ஆண்டு சராசரியாக 31 குழந்தைகள் நாள் ஒன்றுக்கு மரணமடைந்துள்ளனர்” எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்ததை அடுத்து மனநல பாதிப்பு காரணமாகவே பெரும்பாலான குழந்தைகள் தற்கொலை செய்துகொண்டதாக இந்த ஆய்வு கூறுகிறது.

இந்த ஆய்வின்படி கடந்த 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளை ஒப்பிடுகையில் தற்போது குழந்தைகள் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

18 வயதுக்கு கீழ் உள்ள பதின்பருவத்தினர், சிறுவர்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் குடும்ப பிரச்னைகள், காதல் தோல்வி, நோய் தாக்கம் ஆகியவற்றின் காரணமாக மரணமடைகின்றனர்.

மேலும், போதைப்பொருள் பயன்பாடு, வேலையின்மை, கருத்தரிக்க இயலாமை, தனிமனித வழிபாடு உள்ளிட்ட மேலும் சில காரணங்களால் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் இறப்பதாகத் தெரியவந்துள்ளது.

You might also like