அசை போடச் சொல்லும் கவிதைகள்!

நூல் வாசிப்பு: 

*

’சொல் அறை.’

சமீபத்தில் வெளிவந்து கவனம் பெற்றிருக்கும் ராசி.அழகப்பனின் கவிதை நூல். சிக்கனமான மொழியில் பல கவிதைகள்.

”வாழ்தலின் பதிவு தானே கவிதைகள். அதைச் சரிவரச் செய்வது தான் அறம். அந்த அறத்தை நான் பின்பற்றி உள்ளதாகக் கருதுகிறேன்” என்று முன்னுரையில் தன் கவிதைகளுக்கான பின்புலம் குறித்துச் சொல்கிறார் ராசி.அழகப்பன்.

கவிதைகளை மௌனமாய் வாசிப்பது நல் அனுபவம். இவரோ கொஞ்சம் அசை போட்டுக் கவிதைகளைப் படிக்கச் சொல்கிறார்.

192 பக்கங்கள் அடங்கிய இந்த நூலில் உள்ள கவிதைகளில் இரண்டு மட்டும் இங்கே உதாரணத்திற்கு:

*

சாதனை

எவரையும் வீழ்த்தாது

தன்னிலை பிறழாது

உயிர்த்து உறவாடி

இருத்தலே சாதனை.

*

நான் எனது எப்போதும்!

நான் விரும்பியதில்லை

இவ்விடத்தில்

இவர்கள் வழியாக

இந்த மதத்தில்

இப்பெயருடன் பிறக்க…

இயற்கையும்

சூழலும்

நகர்த்திய பயணம்.

நிறம் இடம் கண்டு

என்னை நகர்த்தாதே.

உன்னோடு உரையாட

காலம் பணித்தது.

நிகழ்வொன்றே

நிஜம்.

வேற்றுமைகளைக்

குறை.

திசைகளின் வழியே

சிந்தித்து நகர்.

சொற்களின்

சுவை கூட்டு.

பேச அனுமதி.

மௌனம் மகத்தானதல்ல

எப்போதும்.

உதடுகள் உரசி வரும்

மொழியில்

மனம் பேசுவது மாண்பு.

என்னவோ நீயும்

நானுமாக இன்று

கண்களால் பிரதியெடுக்கிறோம்.

இருக்கிறோம் இப்படியான

மானுட வரலாற்றில்..

எவையும்  சென்றது

வாரா!

*

சொல் அறை
ஆசிரியர்: ராசி அழகப்பன்
192 பக்கங்கள்
விலை : 200
வெளியீடு : பேஜஸ்  பப்ளிகேஷன்,
7, 20-வது குறுக்குத் தெரு,
கிராம நெடுஞ்சாலை, சோழிங்க நல்லூர்,
சென்னை- 119
செல் : 9176804412

You might also like