– விளாசும் சிவசேனா
மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையில் நடக்கும் ஆட்சிக்கு எதிராக அடுத்தடுத்துப் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது ஒன்றிய பா.ஜ.க அரசு.
இந்நிலையில் சிவசேனாவின் அதிகாரபூர்வமான இதழான ‘சாம்னா’ இப்படி எழுதியிருக்கிறது.
“சி.பி.ஐ., அமலாக்கத் துறை, வருமானவரித்துறை, போதை தடுப்புத் துறை என்று அனைத்து அமைப்புகளையும் சிவசேனாவுக்கும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் எதிராக ஒன்றிய பா.ஜ.க அரசு திருப்பி விட்டிருக்கிறது.
குற்றம் சுமத்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்துவதில் தவறில்லை. ஆனால் அவர்களின் குழந்தைகள், குடும்பத்தினர், உறவினர்கள் என்று பலரிடமும் விசாரணை என்ற பெயரில் தொல்லைகள் கொடுக்கப்படுகின்றன.
இது பா.ஜ.க.வின் மனிதாபிமானமற்ற முகத்தைக் காட்டுகிறது.
கேள்வி கேட்பது பா.ஜ.க.வுக்குப் பிடிக்காது. அதை மீறிக் கேள்வி கேட்பவர்களை பாரதிய ஜனதா இருந்த இடம் தெரியாமல் ஆக்கிவிடுகிறது.”