3-வது நாளாகத் தொடரும் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம்!
14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், அரசுப் போக்குவரத்து கழகங்களுக்கு உரிய நிதி வழங்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 25-ம் தேதி முதல் போக்குவரத்துத் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
தொ.மு.ச., சி.ஐ.டி.யு., எச்.எம்.எஸ்., ஏ.ஐ.டி.யூ.சி. உள்ளிட்ட 9 தொழிற்சங்கங்களை சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் தமிழகம் முழுவதும் இன்று 3-வது நாளாக அரசுப் பேருந்து ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பேருந்துகள் வழக்கத்தைவிடக் குறைந்த அளவில் இயக்கப்படுவதால் பல மாவட்டங்களில் மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.
இந்நிலையில், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்துத் தொழிலாளர்களை பேச்சுவார்த்தைக்கு வருமாறு தொழிலாளர் நல ஆணையம் அழைத்துள்ளது.
தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் இன்று மாலை 3 மணிக்கு போக்குவரத்துத் தொழிலாளர்களுடன் தொழிலாளர் நல ஆணையம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.
27.02.2021 11 : 11 A.M