நர்சரி கார்டன் தொழிலில் இவ்வளவு சம்பாதிக்க முடியுமா?!
நர்சரி கார்டன் என்னும் தோட்டம் வளர்ப்புத் தொழில் அதிக லாபம் தரக்கூடிய தொழிலாக வளர்ந்து வருகிறது.
இந்தத் தொழிலுக்கு தேசிய தோட்டக்கலை இயக்குனரகத்தில் மானியத்துடன் கடன் பெற முடியும்.
குறைந்த முதலீட்டில் நர்சரி துவங்க 4 முதல் 5 சென்ட் இடம் இருந்தால் போதுமானது.
செடிகள் அதிக வெயில் காரணமாக உலா்ந்து விடாமல் இருக்க பாதுகாப்பான நிழல் வலைக்கூண்டு அமைக்க குறைந்தபட்சம் பணம் செலவாகும். அதாவது பூக்கும் செடிகளுக்கான மறைமுக வெயில் தரும் கூடாரத்திற்கு சுமாா் 30 ஆயிரம் ரூபாய் வரை செலவாகலாம்.
பூந்தொட்டிகளுக்கும், பூச்செடிகளை வைப்பதற்கான பாலிதீன் கன்டெய்னர்களும் வாங்க 10 ஆயிரம் ரூபாய் வரை தேவைப்படும்.
இது தவிர பாதுகாப்பு வேலி, மண் சமப்படுத்தும் கருவி, நீா் இறைக்கும் மோட்டார் போன்ற அடிப்படை கட்டமைப்பிற்காக சுமாா் 2 லட்சம் ரூபாய் வரை தேவைப்படும்
குறைந்தபட்சம் 20 ஆயிரம் ரூபாயைக் கொண்டு பொதுவாக மக்கள் பயன்படுத்தக்கூடிய பூச்செடிகள், மூலிகைச் செடிகள், அலங்காரச் செடிகள் உள்ளிட்ட செடிகளை வாங்கி வளர்க்கலாம்.
சரியான நேரத்தில் தண்ணீர் தெளிப்பது, உரமிடுவது, 25 தினங்களுக்கு ஒரு முறை மண்புழு உரம், இயற்கை உரம், வேப்பம் புண்ணாக்கு சமஅளவு கலந்து உரமிடுதல் உள்ளிட்ட முறையான பராமாிப்பு அவசியம்.
செடிகள் ஈரப்பதத்துடன் இருந்தால் செடிகளின் வளர்ச்சி நன்றாக இருக்கும். செடிகளில் நோய் இருந்தால் கிளைகளை வெட்டி வெயில் இல்லாத நேரங்களில் மருந்து தெளிக்க வேண்டும்.
ஒரு சில செடியில் உள்ள இலைகளைக் கொண்டே சுமார் 500 செடிகள் வரை உற்பத்தி செய்வது இந்த முறையில் சாத்தியமாகும்.
அதாவது செடிகளிலிருந்து இலைகளை எடுத்து மண் நிரம்பிய பாலீதீன் பைகளில் போட்டு நிழற்கூடத்தில் வைத்து பராமரிக்க வேண்டும் இலைகளிலிருந்து வேர் துவங்கி 50 நாட்களில் செடி உற்பத்தியாகும்.
நர்சரி கார்டனில் செடிகள் மட்டுமின்றி தென்னை, மா, சப்போட்டா போன்ற மர கன்றுகளையும் வளர்த்தால் கூடுதல் வருமானம் பெறலாம்.
தேடிவரும் வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி குடியிருப்பு பகுதிகள், வணிக நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு ஆர்டர் எடுத்து டெலிவரி செய்தால் அதிக வருமானம் ஈட்டலாம்.
19.02.2021 03 : 50 P.M