12 ம் வகுப்புப் பொதுத் தேர்வு மே-3 ல் துவக்கம்!
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்ததால், 9 முதல் 12 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டன.
பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு 6 நாட்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு, பாடங்கள் முடிக்கப்படுகின்றன. செய்முறை வகுப்புகளும் வாரத்தில் இரண்டு நாட்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தமிழகத்தில் பனிரெண்டாம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 03.05.2021 அன்று தொடங்கி 21.05.2021 அன்று முடிவடையும் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
தேர்வு அட்டவணை
மே 3 – மொழிப்பாடம்
மே 5 – ஆங்கிலம்
மே 7 – கணினி அறிவியல்
மே 11 – இயற்பியல், பொருளாதாரம்
மே 17 – கணிதம், விலங்கியல்
மே 19 – உயிரியல், வரலாறு
மே 21 – வேதியியல், கணக்குப் பதிவியல் உள்ளிட்ட தேர்வுகள்
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 8 லட்சம் மாணவ, மாணவிகள் பொதுத்தேர்வை எழுத உள்ளனர்.
காலை 10 மணி முதல் காலை 10.10 மணி வரை மாணவர்கள் வினாத்தாளை படிக்க அனுமதிக்கப்படுவர்.
காலை 10.10 மணி முதல் காலை 10.15 மணி வரை மாணவர்களின் விவரங்கள் பரிசோதிக்கப்படும்.
காலை 10.15 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை பொதுத் தேர்வுகள் நடைபெறும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.
17.02.2021 01 : 30 P.M