இயக்குனராக அறிமுகமாகும் ராஜ்கிரண் மகன்!

‘ராசாவே உன்ன நம்பி’ திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் களம் இறங்கியவர் ராஜ்கிரண்.

அதைத்தொடர்ந்து ‘என் ராசாவின் மனசிலே’ படத்தின் மூலம் ஹீரோவாகவும் நடிக்கத் தொடங்கி வெற்றிகரமாக இன்று வரை திரையில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

1991-ஆம் ஆண்டு ராஜ்கிரண் தயாரிப்பில், கஸ்தூரி ராஜா இயக்கத்தில், ராஜ்கிரண் – மீனா நடிப்பில் வெளிவந்த இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

இந்தப் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். இத்திரைப்படத்தில் தான் நகைச்சுவை நடிகர் வடிவேலுவை ராஜ்கிரண் அறிமுகப்படுத்தினார்.

தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்தை ராஜ்கிரணின் மகன் திப்பு சுல்தான் நைனார் முஹம்மது இயக்க இருக்கிறார்.

இது குறித்து நடிகர் ராஜ்கிரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இறை அருளால், இன்று, என் மகனார் திப்பு சுல்தான் நைனார் முஹம்மது அவர்களின் இருபதாவது பிறந்த நாள்.  ‘என் ராசாவின் மனசிலே’ இரண்டாம் பாகத்துக்கான கதையை எழுதி முடித்துவிட்டு, திரைக்கதையை எழுதிக் கொண்டிருக்கிறார்.

அவரே படத்தை இயக்கவும் உள்ளார். அவர் மிகப்பெரும் வெற்றிப்பட இயக்குனராக, உங்கள் அனைவரின் பிரார்த்தனைகளையும், வாழ்த்துகளையும் வேண்டுகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

01.02.2021 04 : 14 P.M.

You might also like