விவசாயிகள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறை கண்டிக்கத்தக்கது!

இந்தாண்டின் முதல் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. வழக்கம் போல, காலை 11 மணிக்கு மக்களவை, மாநிலங்களவை கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.

இந்தக் கூட்டத்தில் வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தி போராடி வரும் விவசாயிகளுக்கு தங்களது ஒன்றுபட்ட ஆதரவை தெரிவிக்கும் வகையில், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் குடியரசுத் தலைவரின் உரையைப் புறக்கணித்தன.

பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத்தலைவர் நிகழ்த்திய உரையில், அவர் பேசியதாவது:-

* ஊரடங்கு காலத்தில் உணவிற்காக சிரமப்படும் நிலை யாருக்கும் ஏற்படவில்லை

*ஒரே நாடு; ஒரே ரேஷன் திட்டத்தால் பலர் பயனடைந்துள்ளனர். அனைத்து சவால்களையும் இந்தியா எதிர்த்துப் போராடும்.

*ஏழைகள் நல்வாழ்வு திட்டம் மூலம் மக்கள் பயனடைந்துள்ளனர்.

*புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது அரசு அதிக கவனம் கொண்டுள்ளது.

*நாடு தன்னிறைவு பெறுவது அவசியம் என்பதை கொரோனா உணர்த்தியுள்ளது.

*தன்னிறைவு இந்தியா திட்டம் மூலம் தியாகிகளின் கனவு நனவாகியுள்ளது.

*சுகாதார திட்டங்கள் அனைத்தும் எல்லா ஏழை மக்களையும் சென்றடைந்துள்ளது.

*14 கோடி ஏழைப் பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் வழங்கப்பட்டுள்ளது.

*அரசின் பல்வேறு முடிவுகள் கூட்டாட்சி அமைப்புக்கு உதாரணமாக திகழ்கிறது.

*மத்திய, மாநில அரசுகளிடையே இணக்கமான சூழல் ஜனநாயகத்தை வலிமைப்படுத்தியுள்ளது.

*கொரோனா பரிசோதனைப் பெட்டக உருவாக்கம் சுயசார்பை பறைசாற்றுகிறது.

*புதிதாக 22 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

*நாடு முக்கியத்துவத்தை அதிகரிக்க தன்னிறைவு அடைவதோடு, மற்றவர்களைச் சார்ந்திருப்பதைத் தவிர்க்க வேண்டும்.

*விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

*தன்னிறைவு இந்தியா திட்டம் விவசாயிகள் வாழ்வில் முக்கிய பங்காற்றுகிறது. சிறு,குறு விவசாயிகள் மீது கவனம் செலுத்த வேண்டும்.

*வேளாண் உற்பத்தி தற்போது சிறப்பான நிலையில் உள்ளது.

*சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரைப்படி விவசாயிகளின் விளைபொருட்களுக்கு ஒன்றரை மடங்கு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

*பயிர்க் காப்பீடு திட்டம் சிறு விவசாயிகளுக்கு பயன்படுகிறது.

*நாட்டின் உணவு தானியம் கையிருப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.

*வேளாண் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

*விவசாயிகளுக்கு உதவ அரசு உறுதி பூண்டுள்ளது.

*ஏழை விவசாயிகளை கைதூக்கி விடவே வேளாண் சட்டம் கொண்டு வரப்பட்டது.

*வேளாண் சட்டங்களை எதிர்க்கும் கட்சிகள் முன்பு ஆதரித்தன.

*இந்தச் சட்டங்கள் மூலம், விவசாயிகளுக்காக புதிய சந்தைகள் திறக்கப்படும்.

*வேளாண் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்பது நீண்ட காலமாக நிலுவையில் இருந்த கோரிக்கை.

*வேளாண் சட்டத்திற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதற்கு மத்திய அரசு கட்டுப்பட்டுள்ளது.

*விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறை துரதிர்ஷ்டவசமானது. அது கவலையளிக்கிறது.

*தேசியக்கொடி அவமதிக்கப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது.

*சட்டம் ஒழுங்கை யாரும் கையில் எடுக்கக்கூடாது.

*கர்ப்பிணிகளுக்கு சிறந்த திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

*முத்ரா யோஜனா திட்டம் மூலம் பெண் தொழில்முனைவோர்கள் பலனடைந்துள்ளனர். 70 % பேருக்குக் கடன் வழங்கப்பட்டுள்ளது.

*முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.25 கோடி அளவுக்குக் கடன் வழங்கப்பட்டுள்ளது.

*ஜல் அபியான் திட்டத்தில் 3 கோடி குடும்பங்கள் பலன் பெற்றுள்ளன.

*அரசின் கொள்கைகள் சிறு,குறு தொழில்முனைவோருக்கு சாதகமாக உள்ளன.

*நமது இளைய தலைமுறையினருக்கு புதிய கல்விக்கொள்கை பயனளிக்கும்.

*அரசின் உதவித்தொகை மூலம் ஏராளமான மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர்.

*பயனாளர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்படுகிறது.

* அரசின் திட்டங்களால் மீனவ சமுதாயம் பயன்பெற்று வருகிறது.

*மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சம வாய்ப்பு வழங்கும் வகையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

*கொரோனா காலத்திலும் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படவில்லை.

*பல்வேறு துறைகளில் தேவைப்படும் சீர்திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

*வங்கித்துறையில் சீர்திருத்தம் கொண்டு வந்துள்ளோம்.

*இந்தியாவில் எளிதாக தொழில் துவங்குவதற்கான சூழலை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

*சுயதொழில் முனைவோரை ஊக்குவிக்க ஏதுவாக கம்பெனிகள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

*வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் இந்தியா மிகப்பெரிய நாடாக உருவெடுத்துள்ளது.

*நக்சல் வன்முறையை குறைத்துள்ளோம்.

*வடகிழக்கு மாநிலங்களில் வன்முறைகள் வெகுவாக குறைந்துள்ளது.

*நாட்டில் உள்ள 27 நகரங்களில் மெட்ரோ ரயில் சேவையை விரிவுபடுத்தும் பணிகள் நடந்து வருகிறது.

*தூத்துக்குடி-ராமநாதபுரம் இடையே எரிவாயு குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது.

*எல்லையில் நமக்கு சவால் விடுத்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

*நாட்டிற்காக தங்களது உயிரைத் தியாகம் செய்த ராணுவ வீரர்களை நாம் போற்றுகிறோம்.

*நமது பாதுகாப்புத் துறையை நவீனப்படுத்தி வருகிறோம்.

*இஸ்ரோவின் பணிகளைக் கண்டு பெருமைப்படுகிறோம்.

*வந்தே பாரத் திட்டத்தை உலக நாடுகள் பாராட்டுகின்றன.

*சர்வதேச அளவில், இந்தியாவிற்கு புதிய அடையாளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

*கடந்த சில ஆண்டுகளாக நாடு சிறந்த வளர்ச்சி பெற்றுள்ளது.

*மின்சார செலவை குறைப்பதற்காக 33 கோடி எல்.இ.டி. மின் விளக்குகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

*தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 10 கோடி கழிப்பறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.

*உள்நாட்டின் தேவையை பூர்த்தி செய்வதுடன், 150 நாடுகளுக்கு அத்தியாவசிய மருந்துகளை இந்தியா அனுப்பி வைத்துள்ளது. சர்வதேச அளவில், தேவைக்கேற்ப மருந்துகள் உற்பத்தியை இந்தியா உறுதிசெய்யும்.

29.01.2021 12 : 44 P.M

You might also like