போராட்டத்தை கைவிட மாட்டோம்!

மத்திய அரவு கொண்டுவந்த புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் 60 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் நேற்று குடியரசு தினத்தையொட்டி ட்ராக்டர் பேரணியில் ஈடுபட்டனர்

இந்தப் பேரணியில் பல இடங்களில் காவல் துறையினருக்கும் விவசாயிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதில், காவல் துறையினர் தடியடி நடத்தியும் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் விவசாயிகளைக் கலைக்க முயன்றனர்.

மோதல் போக்கு காரணமாக நள்ளிரவு முதல் தொடர்ந்து 15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கிடையே டிராக்டர் பேரணியில் ஈடுபட்ட விவசாயிகள் அனைவரும் டெல்லி எல்லையில் கூடி அமைதியாக தொடர்ந்து போராட்டம் நடத்துமாறு போராட்டக்குழு கேட்டுக்கொண்டது.

மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே 11 முறை நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில் டிராக்டர் பேரணியில் ஈடுபட்ட விவசாயிகள், போராட்டத்தின் உச்சமாக செங்கோட்டையில் பஞ்சாப் மாநில விவசாயிகள் தங்களின் சீக்கிய கொடிகளை நட்டு மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

போராட்டத்தைத் தொடர்ந்து தங்களது இடங்களுக்கு திரும்பிய விவசாயிகள், செங்கோட்டையில் போராட்டம் நடத்தியது பெரும் சாதனை என்றும் போராட்டத்தை ஒடுக்க முயன்ற மத்திய அரசுக்கு பாடம் கற்பித்ததாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் 63-வது நாளாக டெல்லியில் நீடிக்கும் முற்றுகைப் போராட்டத்தைக் கைவிடும் பேச்சுக்கே இடமில்லை என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

27.01.2021 02 : 45 P.M

You might also like