தைரியமாக இரு; ஜெயிக்கப் போகிறாய்!

உன்னை தூசி என நினைப்பவர்களிடம் நீ தூசியாகவே இருந்து விடு, அவர்கள் கண்ணில் படும்போது எல்லாம் கண்கலங்குவார்கள் ஏன் தூசியென நினைத்தோம் என்று.

அகங்காரம் மிக்கவனுக்கு குருவின் போதனைகள் கூடப் பயனற்றவை.

பசியால் வாடுவோருக்கும், எளியோருக்கும் வயிறார உணவு அளிப்பவனே கொடையாளி.

என்னுடைய நிஜமான பக்தனை நான் மரணத்தின் பிடியிலிருந்தும் விடுவிப்பேன்.

உன் கவனம் என் மீது இருக்கட்டும். நான் உன்னை கவனித்துக் கொள்கிறேன்.

மனிதர்கள் எவ்விதம் என்னை நம்புகிறார்களோ அவ்விதம் நான் அவர்களை ஏற்றுக் கொள்கிறேன்.

இனி நடக்க போவதை பார்த்து வியக்கப் போகிறாய்.

தைரியமாகப் இரு… ஜெயிக்கப் போகிறாய்.

நீ தேடிச் சென்ற காலம் விலகி, அனைத்தும் உன்னைத் தேடி உனது வருகைக்காக காத்திருக்கும்.

கவலைகளுக்கு என்றும் இடம் தராதே, மனம் தளராமல் இரு.

உன் வேண்டுதல்கள் யாவும் நிறைவேற்றபடும். பொறுமை, நம்பிக்கை, மட்டும் உன் உள்ளத்தில் உண்டெனில் உலகமே உன் காலடியில்.

நீ நிச்சயம் முன்னேறுவாய் உன் மனதில் எதிர்காலத்தைப் பற்றிய பயத்தைத் தூக்கி எறிந்து விடு. உன் வாழ்வை ஒளிரச் செய்ய நான் இருக்கிறேன்.

21.01.2021  5 : 30 P.M

vels
You might also like