தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு!

வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கையை ஒட்டியுள்ள குமரிக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், குமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

தமிழகத்தில் ஜனவரி 14, 15, 16 ஆகிய தேதிகளில் பரவலாக மழை நீடிக்கும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை புறநகர் பகுதிகளை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

12.01.2021 05 : 40 P.M

You might also like