கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்திய உலக அழகி!
இன்று நாம் அன்றாட வாழ்வில் தவிர்க்கவே முடியாத ஒன்றாக மாறிவிட்ட Wi-Fi, Bluetooth, GPS போன்ற வயர்லெஸ் தொழில்நுட்பங்கள் உருவாகுவதற்கு அடித்தளமாக இருந்த நடிகையும் கண்டுபிடிப்பாளருமான ஹெடி லாமார் (Hedy Lamarr) பற்றி நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? உலகம் அவரை ஒரு ஹாலிவுட் நடிகையாகவே கொண்டாடியது. ஆனால், உலகையே மாற்றிய அவரது கண்டுபிடிப்புகளுக்கான அங்கீகாரம், அவர் உயிருடன் இருந்த காலத்தில் முழுமையாக கிடைக்கவில்லை. ஹெடி லாமார், 1914-ம் ஆண்டு நவம்பர் 9-ம் தேதி ஆஸ்திரியாவின் வியன்னாவில், […]
பெரியாரும் தம்பியும் சாப்பிட்ட ஹோட்டல்கள்!
சொந்த ஊரில் நிதானமாய்ச் சுவைத்துச் சாப்பிடுவது தனி சுகம்! இசையை ரசிப்பதற்குத் தனி ஈடுபாடு இருப்பதைப் போல சாப்பிடுவதும் கூடத் தனி ரகம் தான்! எதற்கெடுத்தாலும் அரவை மிஷினுக்குள் தள்ளிவிடுவதைப் போல வாய்க்குள் தள்ளுகிறவர்கள் கொஞ்சம் நகர்ந்துவிடலாம். குமுதம் (09.07.98) சிறப்பிதழ் இணைப்பில் வெளிவந்த ‘ருசியான’ கட்டுரை இது : தலைப்பு : ‘’மூக்குப் புடைக்க…’’ … தூக்கத்தில் நடக்கிற வியாதி இருக்கிறதா உங்களுக்கு? அப்படியே படுக்கையை விட்டு ‘ஸ்லோ மோஷனில்’ […]
போராட்டத்திற்கான முதல் வெற்றியும்; சில எதிர்வினைகளும்!
டெல்லியில் மட்டுமல்ல, நாட்டின் பல பகுதிகளிலும் மொழி, மாநிலப் பாகுபாடுகளைக் கடந்து இந்தியா முழுக்க மாணவர்கள் எழுச்சியுடன் பல நாட்களாகத் தொடர்ந்து நடத்திய போராட்டத்தின் பலனாக, தற்போது மத்திய கல்வி அமைச்சரான தர்மேந்திர பிரதான் தன் பதவியை விட்டு விலகி இருக்கிறார். அதற்கான காரணத்தையும் தெரிவித்திருக்கிறார். அவர் பதவி விலகியதை அடுத்து இந்தியா முழுக்கப் போராடி வந்த மாணவர்கள் உற்சாகம் அடைந்து குதூகலமாக தங்களது முதல் வெற்றியாக அந்த பதவி விலகளைக் கொண்டாடி இருக்கிறார்கள். ஆனாலும் இதைத் […]
450 மில்லியன் ஆண்டுகளாக உயிர்வாழும் புதைப்படிவம்!
கடற்கரையின் அலை ஓரத்தில் நடந்து கொண்டிருக்கும்போது நண்டு போல தோற்றமளிக்கும் நீண்ட வால் கொண்ட ஒரு விசித்திரமான உயிரினம் மணலுக்குள் இருந்து மெதுவாக வெளியே வந்தால் எப்படி இருக்கும்?
உணவு மரபு குறித்த உண்மைகளை அறிவோம்!
நூல் அறிமுகம் : “உண்டி முதற்றே உணவின் பிண்டம்”, “உணவே மருந்து” என்பவை தமிழர் மருத்துவ அறிவியலில் அடிப்படை பார்வையாகும். “உணவே மருந்து” என்ற இந்நூலில் முதுமுனைவர் இரா. இளங்குமரனார் அவர்கள் வள்ளுவர் தொடங்கி வள்ளலார் வரை தமிழ்ச் சான்றோர்கள் சொல்லிச் சென்றுள்ள உணவு சார்ந்த மருத்தவக் கோட்பாடைத் தெளிவாக விளக்குகிறார். காலம், இடம், அளவு போன்றவற்றைப் பொறுத்து நாம் உட்கொள்ளும் உணவே நோய் ஆக்கியாகவும், நோய் நீக்கியாகவும் செயல்படுவதை சான்றோர் கூற்றுகளின் அடிப்படையில் மிக நுணுக்கமாக […]
மகத்தான படங்களைத் தந்த மகேந்திரன்!
இயக்குநர் மகேந்திரனைப் பற்றிப் பேசாமல் தமிழ்த் திரைப்படங்களைப் பற்றிய எவ்வோர் உரையாடலோ கட்டுரைத் தொடரோ முழுமை பெற்றுவிடாது. தம் படங்களின் வழியாக வாழ்வின் மன நடுக்கோட்டைப் பிடித்துச் சென்றவர் மகேந்திரன். அவருடைய படங்கள் வெளியான காலகட்டத்தில் அவற்றின் பொருண்மை குறித்து தமிழ்ச் சமூகத்தில் போதுமான உரையாடல்கள் நிகழ்ந்தனவா என்பது நமக்குத் தெரியவில்லை. இல்லை என்றே தோன்றுகிறது. ஆனால், அவர் முனைந்து செயல்பட்ட காலத்திற்குப் பிறகு அவருடைய படங்களின் மதிப்பு மேன்மேலும் உயர்ந்துகொண்டே செல்கிறது. ஏன் மகேந்திரன் இன்றியமையாத […]





