அழகும் ஆரோக்கியமும் எந்த உணவில் அதிகம்?

இயற்கையின் படைப்பில் உள்ள ஒவ்வொரு பொருளும் அதற்கே உண்டான தனித்துவமான அழகை பெற்றுள்ளது. மலர்கள், நதிகள், மலைகள் ஆகியவற்றை போல மனிதனின் அழகு என்பது ஒவ்வொரு பருவ வயதிலும் உடல் மற்றும் மன மாற்றங்களுக்கு ஏற்ப இயற்கையாக மாறுபடுகிறது. அழகு என்பது பெண்களுக்கு மட்டுமே உரித்தானது என்ற எண்ணம் மாறி, தற்போது ஆண் பெண் என இரு பாலாருக்கும் பொதுவான ஒன்றாக உள்ளது. அழகாக தோற்றமளிப்பது ஒருவரின் தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்கிறது. ஆளுமைத் திறனை பன்மடங்கு கூட்டுகிறது. […]

நல்ல தண்ணீருக்கு நவீனத் தொழில்நுட்பம் தேவையா?

மனிதர்களின் உயிர் வாழ்விற்கும் ஆரோக்கியம் பேணுவதற்கும் பாதுகாப்பான குடிநீர் அவசியமான அடிப்படை தேவையாகும். இது நோய்களைத் தடுத்து உடலின் சீரான இயக்கத்திற்கு உதவுகிறது. ஆனால், தற்காலத்தில் நிலத்தடி மற்றும் குழாய் வழியே வரும் தண்ணீரில் பல்வேறு மாசுக்கள் கலக்கின்றன. இந்தியாவில் 70 சதவீத தொற்று நோய்கள் தண்ணீர் மூலமே பரவுகின்றன என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. பாதுகாப்பான தண்ணீர் பருகாததால் ஏற்படும் பிரச்சனைகள் ஏராளமாகும். நீரை காய்ச்சி, வடிகட்டி ஆற வைத்து குடிப்பதற்கு எல்லாம் நம்மில் […]

வயிற்றில் உயிர் வாழும் பாக்டீரியா!

வயிற்றில் புண் ஏற்படுவதை ‘அல்சர்’ என்று சொல்கிறோம். இது நம்மில் பலருக்கும் தெரிந்த விஷயம்தான். இந்த அல்சருக்குப் பின்னால் பல ஆண்டுகளாக மனிதர்களுடன் பயணித்து வந்த ஒரு வகை பாக்டீரியாவின் வரலாறு இருக்கிறது. அதன் பெயர் – எச். பைலோரி (H. pylori) 1892-ம் ஆண்டு, இத்தாலியைச் சேர்ந்த மருத்துவரும் உடற்கூறு ஆய்வாளருமான Giulio Bizzozero, நாய்களின் வயிற்றைப் பற்றிய ஆய்வில் சுருள் போன்ற வடிவத்தில் இருந்த சில நுண்ணுயிரிகளைக் கவனித்ததாக பதிவுகள் இருக்கின்றன. இதற்குப் பிறகும் […]

எக்ஸ்பயரி தேதியை ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்?

ஒரு பொருள் பயன்பாட்டில் இருக்கக் கூடிய காலம் முடிவடைந்து விட்டதை குறிப்பதே காலாவதி (expired) என்கிறோம். உயிரையும் ஆரோக்கியத்தையும் காக்கும் மருந்துகளில் தொடங்கி நாம் குடிக்கும் தண்ணீர், சாப்பிடும் உணவு, காய்கறிகள், பழங்கள் என ஒவ்வொன்றுக்குமே காலாவதி காலம் என்று ஒன்று உண்டு. குறிப்பாக மருந்து பொருட்களுக்கு expiry date உண்டு என்பது அனைவரும் அறிந்ததே. ஒவ்வொரு முறை அதை உபயோகிக்கும் போதும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள காலாவதி தேதியை கவனிக்க வேண்டியது மிகவும் முக்கியம். காலாவதி தேதி […]

ஆண்களைவிட பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவது ஏன்?

தைராய்டு பிரச்சனை ஆண்களைவிட பெண்களுக்கு அதிகம் இந்த பாதிப்பு வருவதற்கான சாத்திய கூறுகள் உள்ளதாக கூறப்படுகிறது.

கர்ப்பகாலம், மாதவிடாய் காலம் போன்ற நேரங்களில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் இதற்கு முக்கிய காரணிகளாக உள்ளன.

இளமையைக் கூட்டும் ஜும்பா நடனம்!

நவீன வாழ்வில் அதிகரிக்கும் வேலைப்பளுவில் இருந்து சற்றே இளைப்பாறுவதற்கும் இழந்த ஆற்றலை மீட்டு புத்துணர்ச்சி பெறுவதற்கும் நமக்கு உதவுபவை இசை மற்றும் நடனக் கலைகள். ஊடகங்களின் வளர்ச்சி காரணமாக முன்னெப்போதும் இல்லாத வகையில் அனைத்து தரப்பு மக்களிடமும் நடனங்கள் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது. திருமணம் முதற்கொண்டு எல்லா சுப நிகழ்ச்சிகளிலும் தவறாமல் இவை இடம்பெறுகின்றன. வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமல்லாமல் மன அழுத்தத்தை போக்கும் மாமருந்தாகவும் இவை செயல்படுகின்றன. பல்வேறு வகை நடனங்கள் தற்போது அறிமுகம் ஆகியுள்ளன. இவற்றில் […]