Browsing Category

சினி நியூஸ்

நடிப்பது மிகக் கடினமான ஒன்று!

இன்றைய திரைமொழி: உணர்வுகளின் அதீத அழுத்தத்தோடு, அசைவற்று நிற்கும் ஓர் ஆற்றலை, நான் இணைந்து பணியாற்றிய மிகச் சிறந்த நடிகர்களிடமிருந்து கற்றுக்கொண்டேன். இதுபோதும்; இதுவே ஆகக் கடினமான ஒன்றானது. - மார்கன் ஃப்ரீமேன், அமெரிக்க நடிகர்.

தேக்கத்திலிருந்து விடுபட முயற்சி செய்யுங்கள்!

இன்றைய திரைமொழி: கதை எழுதும்போது தேக்கநிலை அடைந்து எழுத்து தடைபட்டால், கதையில் அடுத்ததாக என்னவெல்லாம் நடக்கக் கூடாது என்று பட்டியலிடுங்கள். பெரும்பாலான நேரத்தில், தேக்கத்திலிருந்து விடுவிக்கும் விஷயம் இப்பட்டியலில் பிடிபட்டுவிடும். -…

கதை சொல்லலுக்கான விதிகள்!

இன்றைய திரைமொழி: கதையின் முடிவைத் தீர்மானியுங்கள்: மையப் பகுதியையெல்லாம் கூட அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்; கண்டிப்பாக, முடிவுதான் மிகக் கஷ்டமானது. உங்கள் கதையின் முடிவை முதலில் உறுதி செய்யுங்கள்! - பிக்சரின் கதை சொல்லல் விதிகள்

எழுத்தின் அடிப்படை விதி!

சுவாரஸ்யமான விஷயங்கள் சுவாரஸ்யமான மனிதர்களுடன் நடக்கின்றன என்பதுதான் திரைக்கதை எழுத்தின் அடிப்படையான மற்றும் ஒரேயொரு விதியாக இருக்க முடியும். - இயக்குநர் டைக்கா வைட்டிடி

பத்திரிகைப் பேட்டியால் சிவகுமாருக்கு வந்த பதைபதைப்பு!

'கந்தன் கருணை' திரைப்படத்தில். சிவகுமார் முருகனாக நடித்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் ஒருமுறை ஒரு பத்திரிகைக்கு பேட்டி கொடுத்தார். அப்பத்திரிகை நிரூபர் நீங்கள் இப்பொழுது எத்தனை படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டார்.…

படைப்பும், விமர்சனமும்!

இன்றைய திரைமொழி: எதையும் படைக்காமல் மற்றவர்களை விமர்சனம் செய்து கொண்டிருப்பதை விட, மற்றவர்கள் விமர்சனம் செய்யும்படி எதையாவது படைப்பது நல்லது. - இயக்குநர், எழுத்தாளர் ரிக்கி ஜர்வைஸ்

நாகேஷ் என்ற நடிகனைக் கண்டுபிடித்த படம்!

ஏவி.எம் தயாரிப்பில் நாகேஷ் நடித்த முதல் படம் ‘நானும் ஒரு பெண்’. நாகேஷை படத்தில் ஒப்பந்தம் செய்வதற்கு ஏவி.எம்.சரவணன் சார் சம்பளம் பேசினார். ‘‘ஐயாயிரம் வைத்துக் கொள்ளலாமே’’ என்று நாகேஷிடம் கேட்க, அதற்கு நாகேஷ் ‘‘ஏழாயிரமாக இருக்கட்டுமே’’…

கற்றுக்கொள்வதும், பெற்றுக்கொள்வதும்!

இன்றைய திரைமொழி: எழுதுவதற்குக் கற்றுக் கொள்ள முடியும், எழுதுவதற்கு சொல்லிக் கொடுக்க முடியாது. காரணம் எழுத்துக்குத் தேவை ஓயாத வாசிப்பு. அதை எழுத வேண்டியவர் தானே செய்தாக வேண்டும். - எழுத்தாளர் ஸ்டீபன் கிங்

மனிதர்கள் புதிரானவர்கள்!

இன்றைய திரைமொழி: மனிதர்கள் சிக்கலானவர்கள், தனக்குத்தானே புதிரானவர்கள்; ஒருவருக்கொருவர் பிரச்சனைக்குரியவர்கள். ஆனால் கதைகளைச் சொல்லுகையில் எல்லோரும் ஒரே மாதிரியானவர்கள் என்பது விளங்குகிறது. - நடிகர் பிராட் பிட்

மக்கள் ஏற்றுக்கொள்கிற தீர்வுகள்தான் தேவை!

இன்றைய திரைமொழி: நடைமுறைக்கு ஒத்துவருகின்ற, எல்லோரும் ஏற்றுக் கொள்கிறபடியான தீர்வுகள் தான் சிறந்தவை, அப்படியான தீர்வுகளை மக்கள் அவர்களாகவே கண்டு கொள்வார்கள். - இயக்குநர் சத்யஜித் ரே