உலகத் தமிழ் நாள் மற்றும் குறள்நெறி அறிஞர் இலக்குவனாரின் 117-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, இலக்குவனார் இலக்கியப் பேரவை சார்பில் பிறந்தநாள் பெருமங்கல விழா, நூல்கள் வெளியீடு மற்றும் இலக்குவனார் திருக்குறள் விருதுகள் வழங்கும் விழா நாளை (நவம்பர் 15) சென்னையில் நடைபெற உள்ளது.
சென்னை கே.கே. நகரில் உள்ள டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் காலை 9.30 மணிக்கு விழா நடைபெறுகிறது.
விழாவில் தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
விழா, தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்குகிறது. இலக்குவனார் இலக்கியப் பேரவையின் செயலர் கவிஞர் தமிழ்க்காதலன் வரவேற்புரை நிகழ்த்துகிறார். இலக்குவனார் திருவள்ளுவன் தலைமையுரை ஆற்றுகிறார்.
விழாவின் முக்கிய நிகழ்வாக, பேராசிரியர் சி. இலக்குவனார் மற்றும் இலக்குவனார் திருவள்ளுவன் உள்ளிட்டோர் எழுதிய, தொகுத்த பத்து நூல்கள் வெளியிடப்பட உள்ளன.
‘வள்ளுவர் கண்ட இல்லறம்’, ‘தமிழ்ப்பேரரசர் இலக்குவனார்’, ‘குறள்நெறி அறிஞர் இலக்குவனார்’, ‘குறட் சிந்தனைகள்’, ‘செந்தமிழ்க் காவலர் இலக்குவனார்’, ‘பேராசிரியர் சி. இலக்குவனாரின் தமிழ்க் கற்பிக்கும் முறை’, ‘மியான்மரில் தமிழர்கள்’, ‘இலக்குவனார் நூறு’, ‘Tamil Language’, ‘திருக்குறளில் பல வைரங்கள்’ ஆகிய நூல்கள் வெளியிடப்பட உள்ளன.
இந்நூல்களைச் சான்றோர் (செவாலியர்) வீ.ஞா. சந்தோசம், முனைவர் பா. வளனரசு, முனைவர் கு. மோகன்ராசு, முனைவர் சான் சாமுவேல்,
பேராசிரியர் பஷீர் அகமது, பேராசிரியர் ப. இராம்கோபால், கவிஞர் பர்மா க. பஞ்சாட்சரம், முனைவர் செ. இராசேசுவரி, பேராசிரியர் முனைவர் ப. மருதநாயகம், முனைவர் அ. கோவிந்தராசா உள்ளிட்டோர் வெளியிட உள்ளனர்.
தொடர்ந்து, தமிழுக்கும் திருக்குறளுக்கும் சிறப்பான பங்களிப்பை வழங்கிய அறிஞர்களுக்கு இலக்குவனார் திருக்குறள் விருதுகள் வழங்கப்பட உள்ளன.
சான்றோர் (செவாலியர்) வீ. ஞா. சந்தோசம், ஆய்வுலக வழிகாட்டி முனைவர் ப. மருதநாயகம், தனித்தமிழறிஞர் முனைவர் பா. வளனரசு, பேராசிரியர் முனைவர் சான் சாமுவேல், மருத்துவமாமணி புதுமை செயப்பிரகாசம் உள்ளிட்டோருக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.
மேலும், பேராசிரியர் பஷீர் அகமது, ஆ. விசுவநாதன் (தமிழ்க் குழவி), சிந்தனைக் கவிஞர் பறம்பு நடராசன், சுரேசு சம்பந்தன், க. செயபாலன், பேராசிரியர் ப. இராம்கோபால் ஆகியோரும் விருது பெற உள்ளனர்.
நூல் வெளியீட்டு நிகழ்வில் பொறியாளர் இ. திருவேலன் ஒருங்கிணைப்பாளராகச் செயல்படுகிறார்.
விழாவில் முனைவர் பா. வளனரசு, முனைவர் கு. மோகன்ராசு, முனைவர் சான் சாமுவேல், சான்றோர் வீ. ஞா. சந்தோசம், கவிஞர் பர்மா க. பஞ்சாட்சரம் உள்ளிட்டோர் உரையாற்றுகின்றனர்.
நன்றியுரையைப் புலவர் இல. சார்ந்தா வழங்குகிறார். பங்கேற்பாளர்களுக்கு நண்பகல் 12.30 மணிக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழறிஞர் இலக்குவனாரின் தமிழ்ப்பணி, திருக்குறள் ஆய்வு மற்றும் தமிழ் மொழி வளர்ச்சிக்கான பங்களிப்புகளைப் போற்றும் வகையிலும், தமிழ் இலக்கியப் பணியில் ஈடுபட்டுள்ள அறிஞர்களைச் சிறப்பிக்கும் வகையிலும் இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நிகழ்ச்சி நடைபெறும் இடம்: டிஸ்கவரி புக் பேலஸ், 1055-A, முனுசாமி சாலை, கே.கே. நகர், சென்னை – 78.
தொடர்புக்கு: 9884481652.

