எழுத்தாளராவதற்கு என்ன தகுதி வேண்டும்?

ஒரு எழுத்தாளருக்கு அழகுணர்ச்சி இருக்க வேண்டும். அழகுணர்ச்சி இல்லாதவர் எழுத்தாளராக வர முடியாது.
 
மென்மையான உணர்வுகள் இருக்க வேண்டும். தடித்தனமான, காண்டாமிருகம் போன்ற மனோபாவம் உடையவர் நல்ல எழுத்தாளராக மாறுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு.
 
உலகத்தை நுட்பமாகக் கூர்ந்து கவனிக்கக்கூடிய மனப்பக்குவமும் மனோபாவமும் இருக்க வேண்டும்.
 
யார் என்ன சொன்னாலும், தனது மனதிற்குள் என்ன தோன்றுகிறதோ அதை மட்டுமே சொல்ல வேண்டும்.
 
இவர் மகிழ்ச்சியடைவார் அல்லது அவர் சந்தோஷப்படுவார் என்று மற்றவர்களுக்காக எழுதாமல், தனது சொந்த நிலையிலிருந்தே பேச வேண்டும்.
 
பிறகு வாசிப்பு என்பது மிக மிக முக்கியம்.
 
தினந்தோறும் தவறாமல் எழுத வேண்டும்.
 
அது பிரசுரமாகிறதா, ஆகவில்லையா அல்லது கிழித்துப் போடப்படுகிறதா என்பது முக்கியமல்ல;
 
எழுத்துப் பயிற்சி தொடர வேண்டும்.
 
மொழிநடை என்பது கூர்மையான பிளேடு (Blade) போல மிகக் கூர்மையாக இருக்க வேண்டும். அப்போதுதான் சிறப்பாக எழுத முடியும்!
 
~ எழுத்தாளர் சுந்தரராமசாமி
You might also like