ஏஐ தொழில்நுட்பத்தில் மீண்டும் வலம் வரும் எம்.ஜி.ஆர்!

இடைத்தேர்தல் நடப்பதையொட்டி தமிழகத்தில் நடந்த வெவ்வேறு பரப்புரையின்போது மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் பல அரசியல் உணர்வு கலந்த பாடல்கள் நினைவூட்டப்பட்டிருக்கின்றன.

தமிழக சட்டசபையில் மட்டுமல்ல, தேர்தல் பரப்புரை போன்ற தருணங்களிலும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை நினைவுகூர்வது பல அரசியல் கட்சிகளுக்கு இயல்பாகிவிட்டது.

முக்கியமாக, ‘நேற்று இன்று நாளை’ படத்தில் இடம்பெற்ற மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் பாடிய, ‘தம்பி… நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று’ என்று துவங்குகிற பாடல் வரிகள் அடிக்கடி தவெகவினரால் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

தற்போது, கடந்த 2 வாரங்களாக சமூக வலைதளங்களில் அலை அடித்த மாதிரி பரவி பல லட்சக்கணக்கானவர்களால் கொண்டாடப்பட்டிருக்கிறார் எம்.ஜி.ஆர்.

ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் அவரை மிக இளமையான தோற்றத்தில், வடிவமைத்திருக்கிற இளைஞர்கள், அவரை அதே தோற்றத்தில் பாடவும் வைத்திருக்கிறார்கள். சண்டை போடவும் வைத்திருக்கிறார்கள்.

இந்த தொழில்நுட்பம் சார்ந்த மக்கள் திலகத்தின் காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவிக் கொண்டிருக்கிறபோது, ஒன்று மட்டும் புரிகிறது.

எம்.ஜி.ஆர். மறைந்து நாற்பதாண்டுகளுக்கு மேலாகியும் அவரை இப்போதும் விரும்பும் இளம் ரசிகர்களின் மனதில் அவர் உயிர்ப்போடு வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.

You might also like