வெள்ளம் புரள்வதுமில்லை ஊற்று வற்றுவதுமில்லை!

வாசிப்பின் ருசி :

எழுதும் விஷயத்துக்கு என்றுமே நான் பஞ்சப்பட்டதில்லை.

எழுத்தடைப்பு – என்று சொல்வார்கள். இதுவரை எனக்கு நேர்ந்ததில்லை. காரணம், ஒருவேளை, நான் மெதுவாய் எழுதுபவன்தான். ஆனால், ஓயாமல் எழுதிக் கொண்டிருப்பவன்.

தினம், சங்கல்பமாக வெள்ளைக் காயிதத்தைக் கறுப்பாக்குகிறேனோ இல்லையோ, நெஞ்சில் எழுத்து கிளைத்துக் கொண்டேயிருக்கும்.

இது என்னால் தவிர்க்க முடியாத நிலை… தேக ரீதியில் சிரமமான நிலை… ஆனால், அதில்தான் உற்சாகம் இருக்கிறது.

என் கற்பனை திடீர் திடீர் என வெள்ளம் புரள்வதில்லை. ஆனால், ஊற்று வற்றியதில்லை!

– எழுதுவது குறித்து லா.ச.ரா சொன்ன விளக்கம்

You might also like