திரையிலும் பேரறிஞரைப் போற்றிய பொன்மனச் செம்மல்!

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தன்னுடைய தலைவர் பேரறிஞர் அண்ணாவைப் போற்றியது போல் வேறு எவரும் போற்றியதில்லை. அதற்கு சில உதாரணங்கள் மட்டும் இங்கே.

01. தன் தலைவர் ஊரின் பெயருடன் ‘காஞ்சித் தலைவன்’ என்ற படத்தில் நடித்தார்.

02. ‘நம் நாடு’ படத்தில் அண்ணாவைப் பெருமை படுத்தும் வகையில் அவர் பெயரில் இருந்த ‘துரை’ என்ற பெயரின் கதாபத்திரத்தில் நடித்தார்.

03. ‘அண்ணாவின் பேர் சொல்லும் காஞ்சியைப்போல்’  – இதய வீணை படம்.

04. ‘அண்ணனின் பாதையில் வெற்றியே காணாலாம்’  – படம் மீனவ நண்பன்.

05. ‘உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன்’ – நவரத்தினம் படம்.

06. ‘இதய தெய்வம் நமது அண்ணா தோன்றினார்’ பல்லாண்டு வாழ்க படத்தில் இடம்பெற்ற பாடல்.

07. ‘அண்ணா சொன்னவழி கண்டு நன்மை தேடுங்கள்’ இதயக்கனி படப்பாடல்.

09. ‘என்அண்ணாவை ஒருநாளும் என் உள்ளம் மறவாது’ நினைத்தை முடிப்பவன் படப் பாடல் வரிகள்.

10. ‘அண்ணா அன்று சொன்னார் என்றும் அதுதான் சத்தியம்’ உரிமைக்குரல்.

11. ‘நாட்டிற்காக உழைப்பதற்கே அண்ணா பிறந்தார்’ நேற்று இன்று நாளை படப் பாடல் வரிகள்.

12 ‘சந்தன பெட்டியில் உறங்குகிறார் அண்ணா’ படம் – எங்கள் தங்கம்.

13. ‘சரித்திரம் புகழ்ந்திடும் அறிஞரின் வழி நடப்பான்’ கண்ணன் என் காதலன் படம்.

14. ‘மேடையில் முழங்கு அறிஞர் அண்ணா போல்’ படம் – பெற்றால்தான் பிள்ளையா.

15. ‘நான் செல்லுகின்ற பாதை பேரறிஞர் காட்டும் பாதை’  படம் – புதிய பூமி.

16. ‘தம்பி! நான் பிறந்தேன் காஞ்சியிலே நேற்று’ – நேற்று இன்று நாளை படப் பாடல்.

17. ‘சந்தன பெட்டியில் உறங்குகிறார்; அண்ணா சரித்திர புகழுடன் விளங்குகிறார்’ படம் – எங்கள் தங்கம்.

18. ‘…கேளம்மா கேளு நான் காஞ்சிபுரத்து ஆளு…’  – எங்கள் தங்கம் படப் பாடல் வரிகள்.

நன்றி: முகநூல் பதிவு

You might also like