ஒட்டுப் போட்டக் கூட்டணியா?

செய்தி:

கிழிந்த துணியைத் தைத்தது போல, திமுக கூட்டணி ஒட்டுப் போட்டக் கூட்டணி!

– தவெக தலைவர் விஜய் கடும் தாக்கு.

கோவிந்த் கமெண்ட்:

முதன்முதலில் விக்கிரவாண்டியில் பிரச்சாரத்தைத் துவங்கிய போதே, கூட்டணியில் ஆட்சியில் பங்கு என்பதை அப்போதே அறிவித்துக் கூட்டணிக்கான வலையை வீசியவர், இப்போது திமுகவைப் பார்த்து ஒட்டுப் போட்ட சட்டை என்றெல்லாம் உவமை கூறிப் பேசுவது உகந்ததாகத் தெரியவில்லை.

அவருடைய லாஜிக் படியே பார்த்தால் ஒட்டுப் போட்ட சட்டை போட விரும்பியவரும் அவர்தான் என்பதை மறந்துவிடக்கூடாது.

சீ… ச்சீ… இந்தப் பழம் புளிக்கும் என்கின்ற கதை போல்தான்.

 
You might also like