ஈராக்கின் தெற்குப் பகுதியில் யூப்ரடிஸ் – டைகரிஸ் நதிகள் சங்கமிக்கும் இடத்தில் இருக்கிறது மெசபடோமியா சதுப்புநிலங்கள்.
நாம் வரலாற்றில் படித்த பெயர். மீன் மற்றும் பால் வளம் நிறைந்த பகுதி. இங்குள்ள மக்களிடம் மாடு வளர்ப்பு பாரம்பரிய தொழிலாக இருக்கிறது. செழிக்கும் பசுமை பூமி.
இங்குள்ள உணவுமுறையைப் பற்றி அறிவதற்காகவும் ருசிக்கவும் வந்திருக்கிறார் உலகப் புகழ்பெற்ற புட் யூ டியூபர் மார்க் வெய்ன்ஸ்.
அமெரிக்காவில் பிறந்தவர், தாய்லாந்தில் ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு அங்கேயே வசிக்கிறார்.
உணவின் சுவைக்காக உலகம் சுற்றும் வாலிபன். போகாத நாடுகள் இல்லை. பூமிப்பந்தின் சந்துபொந்துகளில் உள்ள சிறிய நாடுகளுக்கும்கூட மார்க் சென்றுவந்திருக்கிறார். அவரது யூ டியூப் சேனலுக்கு 11.6 மில்லியன் சப்ஸ்க்ரைபர்கள்.
மெசபடோமியாவின் புகழ்பெற்ற மனிதர் அபு ஹைடர். தெற்கு ஈராக்கில் வாழும் மக்களின் பழைமையான பண்பாடு, பாரம்பாரியம், உணவுமுறை ஆகியவற்றை அறிந்தவர். அவருடன் சேர்ந்து பயணிக்கிறார் மார்க் வெய்ன்ஸ்.
வாய்ப்பிருந்தால் பார்த்து ரசியுங்கள்.