தேர்தலைத் தள்ளி வைக்கச் சொல்லும் ராமதாஸ்!

செய்தி:

தேர்தல் அறிவிப்பை தள்ளிவைக்க வேண்டும்!

– பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் உயர்நீதிமன்றத்தில் மனு.

கோவிந்த் கமெண்ட்:


முதலில் செய்தியாளர்களைச் சந்தித்த போதெல்லாம் ஓரளவு புன்சிரிப்புடன், “போகப் போகத் தெரியும்” என்று பாடிக் கொண்டிருந்தார் மருத்துவர் ராமதாஸ்.

அடுத்து, “அரசியலிலிருந்தே என்னை ஒழித்துக்கட்ட முயற்சி நடக்கிறது” என்று தன் மீதே அனுதாபப்பட்டார்.

தற்போது தேர்தலையே தள்ளி வைக்கச்சொல்லி இருக்கிறார்.

திருவிளையாடல் படத்தில் டி.எஸ்.பாலையா சொல்வது மாதிரி, “என்னடா இது திண்டிவனத்திற்கு வந்த சோதனை?”

 
 
You might also like