எம்.ஜி.ஆர். வாழ்வில் பலித்த ‘தர்மம் தலை காக்கும்’!

திரைப்படத்தில் நடிக்க வருவதற்கு முன்பு ’பாய்ஸ்’ நாடகக் கம்பெனியில் இருந்தபோதே, தான் சம்பாதிக்கும் பணத்தின் ஒரு பகுதியை பிறருக்குக் கொடுப்பதையே தர்மமாக வைத்திருந்தார் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

திரையுலகில் வளர்ந்து பிரபலமான பின்னரும், அரசியலில் நுழைந்து ஆட்சியைப் பிடித்த பிறகும், இறுதிவரை தர்மம் செய்வது அவரது முக்கிய இயல்பாகவே மாறி இருந்திருக்கிறது.

இதை வலியுறுத்தும் விதத்தில் மக்கள் திலகத்துடன் நெருங்கிப் பழகியவரான சாண்டோ சின்னப்ப தேவர் 1963-ல் எம்.ஜி.ஆரை கதாநாயகனாக வைத்து எடுத்த படம் ‘தர்மம் தலை காக்கும்’.

இப்படத்தில் கதாநாயகியாக சரோஜாதேவியும், வில்லனாக எம்.ஆர்.ராதாவும் நடித்திருப்பார்கள். வெற்றிகரமாக ஓடிய இப்படத்தில் காரை ஓட்டியபடியே எம்.ஜி.ஆர், கண்ணதாசன் எழுதிய இப்பாடலை பாடுவார்.

“தர்மம் தலைகாக்கும்… தக்க சமயத்தில் உயிர்காக்கும்”

அன்று பாடியது 1967-லும் பலித்திருக்கிறது, 1984-லும் பலித்திருக்கிறது.

கவியரசரின் வாக்கு பலித்திருக்கிறது.

You might also like