500 கதாபாத்திரங்களுக்கு உயிர் தந்த ஒற்றைப் பிறவி!

தமிழ் மற்றும் மலையாள சினிமாவின் அடையாளமாகச் சொல்லப்படுபவர் மூத்த நடிகர் நெடுமுடி வேணு. இவரது இயற்பெயர் கேசவன் வேணுகோபால்.

கேரளாவை சேர்ந்த இவர் தமிழில், ‘அந்நியன்’, ‘பொய் சொல்லப் போறோம்’, ‘இந்தியன்’, ‘சர்வம் தாளமயம்’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் இவர் நடித்துள்ளார். தமிழில் கடைசியாக ‘நவரசா’ இணையத்தொடரில் தமிழில் நடித்திருப்பார்.

கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் வேணு, 1978ஆம் ஆண்டு ‘தம்பு’ திரைப்படம் மூலமாக திரையுலகிற்குள் நுழைந்தார்.

கலகலப்பான சுபாவம் கொண்டவராக அறியப்படும் வேணு, தமது எளிமையான அணுகுமுறை மூலம் எண்ணற்ற ரசிகர்களை தமது பூர்விக மாநிலமான கேரளாவில் கொண்டிருக்கிறார்.

நடிப்புத்துறை தவிர, கிராமியப் பாடல்கள், மிருதங்கம் இசைக் கருவியை கையாளுவதிலும் அவர் தேர்ச்சி பெற்றிருந்தார். 1978 முதல் மேடை நாடங்களில் அவர் மும்முரமாக கவனம் செலுத்தி வந்தார்.

திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு ‘காலகமுடி’ பத்திரிகையில் செய்தியாளராக பணிபுரிந்த அவர், நாடக கலைஞராகவும் இருந்திருக்கிறார்.

திரைப்படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல், ‘தீர்த்தம்’, ‘சவிதம்’ உள்ளிட்ட சில மலையாள படங்களுக்கு திரைக்கதையும் எழுதியுள்ளார்.

சில சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ள இவர், 1989ம் ஆண்டு மலையாளப் படமான, ‘பூரம்’ மூலமாக இயக்குநர் அவதாரமும் எடுத்துள்ளார்.

மலையாளத்தில் இவர் இயக்குநர் ஜி. அரவிந்தன் இயக்கிய தம்பு என்ற படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

கலகலப்பான சுபாவம் கொண்டவராக அறியப்படும் வேணு, தமது எளிமையான அணுகுமுறை மூலம் எண்ணற்ற ரசிகர்களை தமது பூர்விக மாநிலமான கேரளாவில் கொண்டிருக்கிறார்.

நடிப்புத்துறை தவிர, கிராமியப்பாடல்கள், மிருதங்கம் இசைக் கருவியை கையாளுவதிலும் அவர் தேர்ச்சி பெற்றிருந்தார். 1978 முதல் மேடை நாடங்களில் அவர் மும்முரமாக கவனம் செலுத்தி வந்தார்.

திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு ‘காலகமுடி’ பத்திரிகையில் செய்தியாளராக பணிபுரிந்த அவர், நாடக கலைஞராகவும் இருந்திருக்கிறார்.

திரைப்படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல், ‘தீர்த்தம்’, ‘சவிதம்’ உள்ளிட்ட சில மலையாள படங்களுக்கு திரைக்கதையும் எழுதியுள்ளார்.

சில சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ள இவர் 1989ம் ஆண்டு மலையாளப் படமான, ‘பூரம்’ மூலமாக இயக்குநர் அவதாரமும் எடுத்துள்ளார்.

மலையாளத்தில் இவர் இயக்குநர் ஜி. அரவிந்தன் இயக்கிய ‘தம்பு’ என்ற படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

எவ்வித ஆடம்பரமோ, ஆர்ப்பாட்டமோ, டாம்பீகமோ இல்லாது ரொம்ப நாளாகவே திரைத்துறையில் இருந்தவர் நெடுமுடி வேணு.

பலகுரலிலும் தேர்ச்சிபெற்றவர். இவர் படவுலகில் நுழையும் தருணம் புதுமுகங்கள் புகாத காலம். பழைய முகங்களுக்கே மவுசு இருந்த காலம்.

அதனால் ஒரு கலக்கத்துடனேயே நுழைய வேண்டியதாயிற்று இவருக்கு. ஆனால் நுழைந்தபோதிருந்த வரவேற்புடனேயே இருந்திருக்கிறார். அதுதான் அவரது சாமர்த்தியம்.

தம்பு, அரவம், நசுரா எல்லாம் இவரது படவுலக ஏணிகள். சாமரம், ஆவோலம், கானம் என்பவை இவரால் சிறப்புப் பெற்ற படங்கள். பரபரப்பாக ஓடிய “லேகயுடெ மரணம் ஒரு ஃபிளாஸ் பேக்” படத்தின் கதாநாயகனும் இவரே.

எந்தவிதமான பாத்திரங்களில் தான் நடித்தால் எடுபடுவோம் என தேர்ந்தெடுத்து நடிப்பது இவரது வழக்கம்.

வித்தியாசமாக இவரை நடிக்க வைத்த (நவீன கதாபாத்திரங்கள்) படங்கள் தோல்வியைத் தழுவின. இவரது இயல்பான நடிப்பால் தனக்கென சிறப்பான ரசிகர்கள் வட்டத்தை கொண்டிருந்தவர். 

500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள நெடுமுடி வேணு, 3 தேசிய விருதுகள் மற்றும் 6 மாநில விருதுகளை பெற்றுள்ளார். தமிழ்த் திரைப்படங்களில் பல்வேறு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த நெடுமுடிவேணு உடல் நலக்குறைவால் கடந்த 2021-ல் 73 வயதில் காலமானார். 

கதாநாயகன் என்றாலே மிகச் சிறந்த அழகுடன், பந்தாவுடன்தான் இருந்தாகவேண்டும் என்ற கொள்கையை மாற்றியமைத்த நடிகர் நெடுமுடி வேணு, ரசிகர்கள் மனதில் என்றும் நிலைத்து நிற்பார்.

  • நன்றி : முகநூல் பதிவு
You might also like