சிற்ப நுணுக்கங்களில் சிறந்த தொல் தமிழர்கள்!

காஞ்சி கைலாசநாதர் கோயிலில் சினங்கொண்ட சிவனின் காலடியில் மிதிபடும் அரக்கனின் வலியில் கதறும் முகபாவம் தமிழர்களின் சிற்ப சாதனைக்கு ஒரு எடுத்துக்காட்டு.

சிவனின் உடல் மொழியைக் கவனியுங்கள். இடது கையில் ஜாக்கிரதை என்று எச்சரிக்கிறார். புன்முறுவல் பூத்து அச்சிரிப்பினாலேயே திரிபுரங்களை அழியச் செய்த திரிபுராந்தக மூர்த்தி என்பது தொன்மம்.

சிவன் முகத்தில் புன்னகையைக் கவனியுங்கள். கலித்தொகையிலும் சிலப்பதிகாரத்திலும் திரிபுரமெரித்த வரலாறு உள்ளது.

இவர் கடைச்சங்கத்தில் திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள் என்ற பெயரில் புலவராய் இருந்து தமிழ் ஆய்ந்ததாக இறையனார் களவியல் உரை கூறுகிறது.

துரதிருஷ்டவசமாக மணல், கல்லால் கட்டப்பட்ட இக்கலைக்கோயில் இரண்டாம் நரசிம்மவர்மனால் (இராஜசிம்மன்) கி.பி. 700 – 728 கட்டப்பட்டது.

அதிட்டானம் பகுதி மட்டும் கருங்கல்லில். இது சமணக் கோயிலாக இருந்து பின் சிவன் கோயிலாக மாற்றப்பட்டதாக மயிலை சீனி.வேங்கடசாமி குறிப்பிடுகிறார்.

மழையில் கரைந்து வரும் இக்கோயிலை எப்படி காப்பாற்றுவது?

நன்றி: கலை விமர்சகர் இந்திரன் முகநூல் பதிவு

You might also like