அன்னையர் தினம் ஒவ்வொரு வருடமும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், 2025-ம் ஆண்டு மே 11-ம் தேதி அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது.
ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு தேதியில் அன்னையர் தினத்தை கொண்டாடுகிறது. அமெரிக்காவில் மார்ச் 8-ம் தேதி அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது.
அன்னையின் குணத்தை கடவுளுடன் ஒப்பிடுகிறார்கள். அன்னையர் தினம் தாய்மையையும், தாய்மார்களின் அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடுகிறது.
மேலும், தாய்மார்கள் குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் செய்த தன்னலமற்ற பங்களிப்பை அங்கீகரிக்கிறது. அன்னையர்களை கொண்டாடும் இந்த தினத்தின் சின்ன வரலாற்றை தெரிந்துகொள்ளலாம்.
20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அமெரிக்காவில் அன்னையர் தினத்தை நிறுவுவதில் Anna Jarvis முக்கிய பங்கு வகித்தார். 1905-ம் ஆண்டில், Anna Jarvis தன் தாய் Ann Reeves Jarvis இறந்த பிறகு அன்னையர் தினத்தை நினைவுகூற ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கினார்.
அமெரிக்க உள்நாட்டுப் போரின்போது அவர் ஒரு சமாதான ஆர்வலராக இருந்தார். அவரின் தொடர் வெற்றியால், அன்னையர் தினம் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டது. இப்படியே அன்னையர் தின கொண்டாடப்பட தொடங்கியது.
“என் அம்மா தான் என்னை என் காலில் நிற்கக் கற்றுக்கொடுத்தார். தவறுகளிலிருந்து எப்படி கற்றுக்கொள்வது என்று கற்றுக்கொடுத்தார். எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் எனக்கு உதவி செய்தார். என் அம்மாவுடன் நான் மிகவும் நிம்மதியாகவும், அமைதியாகவும் உணர்கிறேன். நான் சிறு வயதாக இருக்கும்போது, என் அம்மா என்னை எழுப்பி படிக்க வைப்பார். என் அம்மா என் வெற்றிக்கும், மகிழ்ச்சிக்கும் எல்லையற்ற தியாகங்களைச் செய்தார். அவள் என் வாழ்க்கைக்கு தன்னுடைய வாழ்க்கை, சந்தோஷம் எல்லாவற்றையும் தியாகம் செய்த தெய்வம்” என்று ஒரு பேச்சாளர் கூறியுள்ளார். ஒவ்வொரு அம்மாவும் தன் குழந்தைகளுக்காக தியாகம் செய்கிறார்கள். அதனால் தான் அன்னையர் தினத்தை கொண்டாடுகிறோம்.
ஒவ்வொருவரின் அம்மாவும் முதல் கடவுள், தத்துவவாதி, வழிகாட்டி மற்றும் நண்பர் என்பது உண்மை. அவள் நம் கைகளைப் பிடித்து நடக்கக் கற்றுக் கொடுக்கிறாள். எப்படி பேசுவது என்றும் கற்றுக்கொடுக்கிறாள். இந்த மாறும் உலகில், அவள் மட்டுமே நிலையானவள். அவளுடைய பெருமையையும், சாதனைகளையும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
அம்மாவின் இதயம் அன்பால் நிறைந்தது. பெற்றோர்கள் தன்னலமற்றவர்கள். மற்றவர்களை சந்தோஷப்படுத்த அவர்கள் பல தியாகங்களை செய்கிறார்கள். அவள் அன்பு மற்றும் அக்கறையின் பிரதிநிதி ஆவாள். ஒரு குழந்தையால் தன் உணர்வுகளை வெளிப்படுத்த முடியாமல் போகலாம். ஆனால், ஒரு தாய் தன் குழந்தைகளின் கண்களைப் பார்த்து அவர்களின் மனதில் என்ன இருக்கிறது என்பதை சொல்ல முடியும். தாயின் அன்பு மிக சக்தி வாய்ந்தது. அவள் எவ்வளவு வலி அனுபவித்தாலும், எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும், அவள் எப்போதும் தன் குடும்பத்திற்கு ஒரு கேடயமாக இருப்பாள்.
நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் அன்னையர் தினம் தான். இருப்பினும், ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையன்று, தாய்மை, தியாகங்கள், அன்பு மற்றும் அக்கறைக்காக அன்னையர் தினத்தை கொண்டாடுகிறோம். இந்த பிரபஞ்சத்தில், தன் குழந்தைகளுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்துவிட்டு எதையும் எதிர்பார்க்காதவர் யாருமில்லை. அவள் எதையும் எதிர்பார்க்காமல் கொடுக்க விரும்புகிறாள். தன் குழந்தையின் சிரிப்பைப் பார்த்து அவள் மகிழ்ச்சியடைகிறாள்.
ஒரு தாய் கொடுக்கும் அன்புக்கும், அக்கறைக்கும் ஈடு இணை எதுவும் இல்லை. தாயின் அன்பை வேறு எதனுடனும் ஒப்பிட முடியாது. இந்த நாளில் உலகெங்கிலும் உள்ள தாய்மார்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.
– ஜான்வி
- நன்றி: சமயம் இதழ்