அருமை நிழல் :
தமிழ் சினிமாவுக்குள் வருவதற்கு முன்பே இசைஞானி இளையராஜாவும், அவரது சகோதரர்களும் பொது நிகழ்ச்சிகளிலும், மேடைக் கச்சேரிகளிலும் பாடல்களைப் பாடி இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர். அப்படி இளையராஜா சகோதரர்களின் இசைக்குழுவில் இணைந்தவர்கள் தான் பின்னாளில் மிகப் பிரபலமான பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், மலேசியா வாசுதேவன் உள்ளிட்டோர்.
அப்படியான இளையராஜாவின் இளமைக்கால நாட்களில் நிகழ்ந்த சந்திப்பு ஒன்றில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் பாடகர் மலேசியா வாசுதேவன், இசைஞானியின் அண்ணன் ஆர்.டி.பாஸ்கர், இசைஞானி இளையராஜாவுடன் அவரது தம்பி கங்கை அமரன்.
– நன்றி: முகநூல் பதிவு