இன்று ரொம்பவே சுவாரசியமான நாள்.
மனநல மருத்துவர்களுக்கு என்று ஒரு அரட்டை குரூப். அதில் ஒருத்தர் ராமபிரானின் மரணம் தற்கொலையா, அல்லது அவதாரம் முடிந்த bye byeயா என்று கேள்வி கேட்டு ஒரு போஸ்ட் போட,
வால்மீகியின் கதைப்படி ராமன் அவதாரம் இல்லை. பிறகுதான் அவர் அவதாரம் ஆக்கப்பட்டார் என்று ராஜாஜியின் “சக்ரவர்த்தி திருமகன்” படித்த நினைவில் நானும் என் வழக்கமான நடையில் எழுத, மாலை முழுவதும் ஒரே விளையாட்டுதான்!
இந்தியத் திருநாட்டில் மனநல மருத்துவர்கள் கூட மதவெறி, ஜாதி வெறி என்று கிட்டத்தட்ட என்னை அடிக்க வராத குறை.
விட்டால் ஜெய் ஶ்ரீராம் சொல்றியா? உன் மண்டைய ஒடைக்கட்டா? என்கிற லெவலில் ஶ்ரீ ராம பக்தர்கள் வந்து ரவுண்டு கட்டி என்னோடு ஒரே எழுத்துத் தகராறு.
கடைசியாக ராம நாமம் பாட தனியாக ஒரு குரூப் ஆரம்பிக்கலாம் என்று வெள்ளை கொடி ஆட்டி அத்தனை வீரர்களையும் இன்று போய் நாளை வர சொல்லி, அப்பாடா! ராமா! உன் பெயரால் நடக்கும் அக்கிரமம் தெரிந்தால், நீ சரயுவில் கூட சாந்தி அடைய மாட்டாய்!
மனநல மருத்துவத் துறையிலேயே மதம் வந்துவிட்டதே! என்று நான் கவலைப்படும்போது, கல்கி மாதிரி ஜிங்கென்று AI புரவி ஏறி, ஞானச் சுடரோடு ஓர் இளைய மனநல மருத்துவர் வந்து, தகவல்களை அடுக்கி, சாதுர்யமாய் எல்லோரையும் ஆஃப் செய்துவைத்தார்.
எல்லோரும் இன்னும் ராமா ராமா என்று திரேதா யுகக் கடவுளை தொங்கிக்கொண்டு இருக்க, நம் ஊனக் கண்ணுக்கு புலப்படாத கலியுகக் கல்கிகள் நம்மிடையே தான் உலவுகிறார்கள்.
நான் அவனை கண்டுக்கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். சம்பவிப்பாய் நீ யுகே யுகே!
நன்றி: ஃபேஸ்புக் பதிவு