நல்ல புத்தகங்கள் மூலம் நம்மை செதுக்குவோம்!

புத்தகங்கள் வெறும் காகிதங்களின் தொகுப்பல்ல; அவை எண்ணங்களைத் தோற்றுவிக்கும் உலைகள். ஒவ்வொரு பக்கமும் நம்முள் புதிதான ஒரு மனிதனை உருவாக்கும். 

நல்ல நூல்களை வாசித்து, அவை நம்மை எப்படி மாற்றுகின்றன என்பதை உணர்ந்து, பிறருக்கும் அதன் விளக்கங்களை பகிர வேண்டும்.

வாசிப்பு என்பது தனிப்பட்ட பயணமல்ல, அது ஒரு அறிவுப் பகிர்வு. ஒவ்வொரு புத்தகமும் நம்முள் புதிது ஒன்றை செதுக்கும் – மனதையும், மனோநிலையையும்.

அறிவை அரிதாக நினைக்கும் யுகத்தில், புத்தகங்கள் தான் நம் மிகச் சிறந்த பயணத் தோழர்கள். இன்று ஒரு பக்கம் வாசியுங்கள் – நாளை நீங்கள் புதிதாகவே நினைப்பீர்கள்!

– நஷீர்

You might also like