சின்ன சோலார் விளக்கு: 30 ஆயிரம் வீடுகளுக்கு கிடைத்த வெளிச்சம்!

இந்தியாவின் கிராமங்களில் 30 ஆயிரம் வீடுகளுக்கு ஓர் எளிய சூரிய விளக்கு எப்படி ஒளியூட்டுகிறது என்பதுதான் ஆச்சரியம். அதற்குப் பின்னால் ஒரு மனிதனின் இலடசியமும் கனவும் புதைந்திருக்கிறது.

சுயசார்பு என்பது சச்சின் தாண்டே உருவாக்கிய பாஸ்கர் என்ற சோலார் விளக்கின் இதயமாக இருக்கிறது. இந்தியாவின் கிராமங்களில் வாழும் மக்கள் இந்த சூரிய விளக்குகளை தங்கள் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்ற அது உதவியாக இருக்கிறது. இருள் அடர்ந்த பகுதிகளில் எல்லாம் அவர் வெளிச்சமாக இருக்கிறார்.

சிறிய சோலார் விளக்கை உருவாக்கக் காரணமாக இருந்தவர் அவரது மனைவி தீபாலி. அவர் கொண்டுவந்த டிசைனில் ஈர்க்கப்பட்டு, சச்சின் தண்டே ‘பாஸ்கர்’ என்ற சிறிய, இலகுரக மற்றும் நீடித்த சூரிய சக்தியில் இயங்கும் விளக்கை உருவாக்கினார்.

இந்த விளக்கை எளிதாகப் பயன்படுத்தலாம். மாலை நேரங்களில் வயல்களில் வேலை செய்யும் விவசாயிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதம். சைக்கிளில் தொங்கவிடலாம். கிராம மக்கள் அவர்களது வசதிக்கேற்ப சோலார் விளக்கைப் பயன்படுத்ததமுடியும். அதன் புத்திசாலித்தனமான வடிவமைப்பு நம்பிக்கை தருவதாக இருக்கிறது.

சச்சின் தண்டேவின் சோலார் விளக்கு உருவாக்கத்திற்குப் பின்னே அவரது வறுமையான பால்ய காலம் இருக்கிறது. ஏழைக் குடும்பத்தில் பிறந்த அவருக்கு வெளிச்சம் என்பது மண் எண்ணை விளக்கில் இருந்துதான் கிடைத்தது. அந்த அனுபவம்தான் அவருக்கு பின்னாளில் சோலார் விளக்கின் அவசியத்தை உணர்த்தியது.

கிராமப்புற மாணவர்கள் படிப்பைத் தொடரவும், கிராம மக்கள் தன்னம்பிக்கை அடையவும் உதவும் ஒரு தீர்வைக் கண்டுபிடிக்கவேண்டும் என்று உறுதி எடுத்துக்கொண்டார்.

பாஸ்கர் என்று பெயரிடப்பட்ட சோலார் விளக்கு ஆறு முதல் எட்டு மணி நேரம் வரை எரியும். மங்கலாக 24 மணி நேரம் வரையில்கூட இருக்கும். இந்த விளக்குக்கு பெரிய அளவில் வயரிங் செய்ய வேண்டியதில்லை. ஏதும் பழுது என்றால் பயிற்சி பெற்ற உள்ளூர்வாசிகளே சரிசெய்து கொடுப்பார்கள்.

‘பாஸ்கர்’ என்ற சோலார் விளக்கு வெளிச்சம் தரும் நண்பனாக கிராமப் புறங்களில் வலம்வருகிறது.

#சூரியவிளக்கு #பாஸ்கர்சோலார்விளக்கு #மாணவர்கள் #தன்னம்பிக்கை #சச்சின்தண்டே #சூரியசக்தி #Solarlamp #BhaskarSolarlamp #Students #selfconfidence #SachinThande #Solarpower

You might also like