சக கலைஞனை எந்த விதத்திலும் விட்டுக் கொடுக்காதவர் கலைவாணர்!

நடிகர் கே.ஏ.தங்கவேலு

“என்னை வாழ வைச்சவர் கலைவாணர் தாங்க. நான் மட்டுமில்லை. என்னை மாதிரி பல நாடகக் கலைஞர்களை நடிக்க வைச்சு, சினிமாவுக்குக் கூட்டியாந்தவரும் அவர் தான்.. அவரோட படத்திலே நடிக்க வாய்ப்புக் கிடைச்சது பாக்கியம்’’ என்றவர் கலைவாணர் சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்வை ரசனையோடு சொன்னார்.
‘’வில்லுப்பாட்டு நடத்துறதுலே கலைவாணருக்கு நிகர் அவர் தான் ஒரு சமயம் காந்தியை பற்றி ஒரு வில்லுப்பாட்டு நிகழ்ச்சி.
கலைவாணருடன் சின்னதாக அவரோட குழுவினர் உட்கார்ந்திருக்காங்க. கூடவே பின்பாட்டு பாடிக்கிட்டிருந்தவருக்கு அடுத்தவரி மறந்து போச்சு.
‘’காந்தி உப்பெடுத்தார்.. உப்பெடுத்தார்ன்னு சொல்லிக்கிட்டே இருக்கார்.. ஜனங்களும் பொறுமையாக் கேட்டுக்கிட்டிருக்காங்க. பார்த்தார் கலைவாணர். இடையில் புகுந்தார்.
‘’நீங்க எல்லோரும் இதோ பாடுறவரு அடுத்தவரியை மறந்துட்டாரா? அதனால் தான் ஒரே வரியைத் திரும்பத் திரும்ப பாடுறார்’’ன்னு நினைச்சிருப்பீங்க.. அது தான் இல்லை.
காந்தியடிகள் உப்பெடுத்தார்ன்னா ஒரு தடவையா குனிஞ்சு உப்பெடுத்தார்.. எத்தனை தடவை குனிஞ்சு உப்பெடுத்திருப்பார்.. அதனால் தான் இவரும் அப்படிப் பாடியிருக்கார்.. பாருங்கன்னு சாமாளிச்சுருக்கார் பாருங்க..
சக கலைஞனை எந்த விதத்திலும் விட்டுக் கொடுக்காத அந்த அபூர்வமான குணம் யாருக்குங்க வாய்க்கும்? அவர் வாழ்ந்து எத்தனையோ விஷயங்களை எங்களுக்கு அமைதியாச் சொல்லிட்டுப் போயிருக்கார்..’’ என்றவர் தான் திரைத்துறையில் சேர்த்த பணத்தை வீடுகளில் பாதுகாப்பாக முதலீடு பண்ணியதை நினைவுகூர்ந்தார்.

 

  • நன்றி : முகநூல் பதிவு 

 

#கலைவாணர் #கேஏதங்கவேலு #kalaivanar #kathangavelu #nsk #nskrishnan #என்எஸ்கே #என்எஸ்கிருஷ்ணன்

You might also like