கலைவாணர் அவர்களின் என்.எஸ்.கே பிலிம்ஸ் தயாரித்த ‘மணமகள்’ படத்தின் கதை, புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர் முன்ஷி பரமு பிள்ளை அவர்களுடையது.
அந்த நாடகத்துக்கு தலைமைதாங்க திருவனந்தபுரம் சென்றபோது, கதை சிறப்பாக இருந்ததால் அதன் உரிமையை எழுத்தாளரிடம் பெற்று மணமகள் படத்தைத் தயாரித்தார் கலைவாணர்.
இந்தப் படத்தில் நாட்டியப்பேரொளி பத்மினி அவர்களை கதாநாயகியாக என்.எஸ்.கே. அவர்கள் அறிமுகப்படுத்தினார். கலைஞர் அவர்கள் வசனம் எழுத, சி.ஆர்.சுப்பராமன் அவர்கள் இசையமைத்திருந்தார்கள்.
தகவல் நன்றி; என்.எஸ்.கே.நல்ல தம்பி