இசையும் கானமும் தமிழர்களின் மரபில் கலந்த உணர்வு!

பாணர், பாடினியர், விறலியர் (ஆடல் மகளிர்) போன்றோர் பண்ணும் தாளமும் கூடிய இசைப்பாடல்களை பண்ணிசைக் கருவிகள், தாளவிசைக் கருவிகள் ஆகியவற்றின் துணையோடு சிறப்பாக பாடி சங்ககால தமிழர் கலையை வளர்த்து உள்ளனர்.

“யாழ், கின்னரம், குழல், சங்கு, தூம்பு, வயிர், தண்ணுமை, முழவு, முரசு, பறை, கிணை, துடி, தடாரி, பாண்டில் மற்றும் இன்னியம்” முதலான இசை கருவிகள் தமிழருக்கே உரிய பாரம்பரியமாக இருந்துள்ளது.

பண்டைத் தமிழரின் காலப்போக்கில் மறைந்தொழிந்த யாழ்கள் முளரி யாழ், சுருதி வீணை, பாரிசாத வீணை, சதுர்தண்டி வீணை முதலானவையாகும்.

யாழினை ‘நரம்பின் மறை’ (தொல்.1:33 2-3) எனத் தொல்காப்பியரும், ‘இசையோடு சிவணிய யாழின் நூல்’ எனக் கொங்குவேளிரும் குறிப்பிட்டுள்ளனர்.

கர்நாடக இசையின் பெருமையான இசைக்கருவியான வீணை, கோட்டு வாத்தியம் இவைகளுக்கு இணையாகத் தமிழிசையில் சொல்லப்படும் இசைக்கருவி யாழ்.

வீணை பற்றிய குறிப்புகள் பல இலக்கியங்களில் காணப்பட்டாலும், யாழிசைக்கு ஒரு சிறப்பான முதலிடம் தரப்பட்டு இருந்ததை காணமுடிகிறது.

வீணையைப் போன்றே யாழும் கம்பி அல்லது நரம்புகளை இழுத்துக் கட்டப்பட்டு கைகளால் இசைக்கப்படும் கருவியாக இருந்திருக்கிறது.

சுவாமி விபுலாநந்தாவின் “யாழ் நூலில்” யாழினைப் பற்றி பல விவரங்கள் கூறப்பட்டிருக்கின்றன. திருமுறையில் சொல்லப்பட்ட மற்ற இசைக்கருவிகளான வீணை,

கொக்கறை, குடமுழவு முதலியனவற்றை பற்றி “கல்லாடம்” நூலில் விளக்கங்கள் காணப்படுகின்றன.

பன்னிரெண்டாவது திருமுறையான பெரியபுராணத்தில் மற்றொரு இசைக்கருவியான குழல் செய்வதைப் பற்றியும், இசைப்பதைப் பற்றியும் சொல்லப்படுகின்றது.

இசையும் கானமும் தமிழர்களின் மரபில் கலந்த உணர்வுகளாக விளங்கின. மனித உணர்வுகளுக்கு உயிரூட்டும் வல்லமை கொண்டவையாக அவை விளங்கின.

ஆகுளி, இடக்கை, இலயம், உடுக்கை, ஏழில், கத்திரிகை, கண்டை, கரதாளம், கல்லலகு, கல்லவடம், கவிழ், கழல், காளம், கிணை, கிளை, கின்னாரம், குடமுழா, குழல், கையலகு, கொக்கரை, கொடுகொட்டி, கொட்டு, கொம்பு, சங்கு, சச்சரி,

பல்லியம், பறண்டை, பறை, பாணி, பாண்டில், பிடவம், பேரிகை, மத்தளம், மணி, மருவம், முரசு, முரவம், முருகியம், முருடு, முழவு, மொந்தை, யாழ், வட்டணை, வீணை, வீளை, வெங்குரல்

தோல்கருவிகளின் பட்டியல்

பொரும்பறை, சிறுபறை, பெருமுரசு, சிறுமுரசு, பேரிகை, படகம், பாடகம், இடக்கை, உடுக்கை, மத்தளம், சல்லிகை, காடிகை கரடிகை, திமிலை, தக்கை, கணப்பாறை

தமடூகம், தண்ணுமை, தடாரி, அந்தரி, முழவு, முரசு, சந்திர வளையம், மொந்தை, பாகம், உபாங்கம், துடி, நாளிகைப்பறை, தமுக்கு, உறுமிமேளம், பறை, முரசு, தம்பட்டம்

தமருகம், நகரா, மண்மேளம், தவண்டை, ஐம்முக முழவம்(குடமுழவு), நிசாளம், துடுமை, அடக்கம், தகுனிச்சம், தூம்பு, பேரிமத்தளம், கண்விடு, துடுகை

உடல், உருட்டி, சன்னை, அரைச்சட்டி, கொடுகொட்டி, அந்தலி, அமுதகுண்டலி, அரிப்பறை, ஆகுளி, ஆமந்தரிகை, ஆவஞ்சி, உடல் உடுக்கை, எல்லரி ஏறங்கோள் கோதை, கண்தூம்பு, கணப்பறை கண்டிகை, கல்லல் கிரிகட்டி, குண்டலம் சடடை, செண்டா, சிறுபறை, தகுனித்தம், தட்டை, தடாரி, பதவை, குளிர், கிணை, துடி, பம்பை

காற்றுக் கருவிகளின் பட்டியல்

புல்லாங்குழல், முகவீணை, மகுடி, சங்கு, தாரை, நாதசுவரம், கொம்பு, ஒத்து, எக்காளம், கொக்கறை, நமரி, திருச்சின்னம், தூம்பு, வயிர்.

நரம்புக் கருவிகளின் பட்டியல்

யாழ், வீணை, தம்பூரா, கோட்டுவாத்தியம், சாரங்கி, பிடில், வில் (இசைக்கருவி), கின்னாரம்.

தட்டுக் கருவிகளின் பட்டியல்

கைமணி, தாளம் அல்லது பாண்டில், நட்டுவாங்கம், கஞ்சம் அல்லது கைத்தாளம், கெண்டி, கடம், சேமக்கலம், தட்டுக்கழி.

மேலும் சிலவகை, இசைத்தூண்கள், நட்டுவாங்கம், மோசிங், சுருதிப்பெட்டி.

இதில் சங்ககால பாரம்பரிய இசை கருவிகளைப்பற்றி கொஞ்சம் விரிவாக பார்க்கலாம்.

உடல் என்று ஒரு இசைக்கருவி இருந்ததெனவும், இது தோல் கருவியைச் சார்ந்ததெனவும் கூறுகின்றனர். இது உருளை வடிவுடையது.

ஊதல்:

சங்ககால ஊதல் வகைகளில் குழல், தூம்பு, முழவு, ஆகுளி, தட்டை, எல்லரி, பதலை, யாழ், கூத்தர் முதலானவை முழக்கும் இசைகளை வழங்கின.

இவைகளை படிக்கும்போதே பல்வேறு இசை ஒலிகளை உணருகின்றோம் பிரமிக்கிறோம்!

பண்டைய தமிழ் மக்களின் வாழ்க்கை உலகின் சிறந்த நாகரீகமாக இருந்து உள்ளதை நாம் அறிவோம்.

ஆனாலும் அதற்கு மேலும் பற்பல சிறப்புகளை வீரம், காதல், இலக்கியம், இசை மொழி ஆகியவற்றில் பெற்றிருந்த காலம் இன்றைக்கு தமிழ் என்றால், ஏதோ சில தூய வார்த்தைகள் மட்டுமே என்ற அளவுக்கு குறுகி இருப்பதன் காரணம் நமது மக்களை தமிழ் பயிற்றுவிக்கும் தன்மை குறைவே ஆகும்.

– நன்றி : தமிழன் வரலாறும் அறிவியலும் முகநூல் பதிவு

You might also like