மனிதன் என்பவன், தெய்வமாகலாம்!

என்.எஸ்.கே.நல்லதம்பி

ஒரு முறை அப்பா கலைவாணரும் – மதுரம் அம்மாவும் இரவு மாடியில் உள்ள பால்கனியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.
அப்போது ஒருவர் வீட்டில் உள்ள பைப்பை பிடித்து மேலே ஏறிக் கொண்டிருப்பதை கலைவாணர் பார்த்து விட்டார்.
நிலவு வெளிச்சத்தில் வருபவர் அறிமுகமான துணை நடிகர் என்றும், அவர் யார் வீடு என்று தெரியாமல் திருடும் நோக்கத்தில் வருகிறார் என்பதை என்.எஸ்.கே அறிந்துகொண்டார்.
வந்தவர் பால்கனியில் குதித்தவுடன், அவரைப் பார்த்து என்.எஸ்.கே…. “வாடா, நான் சொன்ன மாதிரியே பைப்பில் ஏரிவந்துவிட்டாயே, சரி சாப்பிடு” என்று சொல்லி அம்மாவிடம் சாதம் கொஞ்சம் எடுத்து வா என்று அனுப்பியுள்ளார்.
அதோடு வந்தவரிடம், “என்னடா, சினிமா சான்ஸ் கிடைக்கவில்லையா, காசில்லாமல் பிள்ளைகள் பட்டினி கிடக்கிறார்களா?
அதனால் திருட வந்தியா பரவாயில்லை. நாளை ஸ்டுடியோவுக்கு வா சான்ஸ் வங்கித் தருகிறேன்,” என்று சொல்லி அம்மா கொண்டுவந்த பழைய சாதத்தை சாப்பிடச் சொல்லி, கைநிறைய பணத்தக் கொடுத்து “வந்த வழியே பைப்பில் இறங்கிப் போய்விடு” என்று அனுப்பி வைத்தாராம்.
இன்ப அதிர்ச்சியில் உறைந்துபோன அந்த நபர் கலைவாணரை தன் வாழ்நாள் முழுவதும் தெய்வமாக வணங்கினார்.
நன்றி: கலைவாணரின் மகன் என்.எஸ்.கே. நல்லதம்பி பதிவு
You might also like