திருமண விழா, வீட்டு விசேஷங்கள் வந்துவிட்டால் பெண்கள் கைகளில் மருதாணி போடுவது வழக்கமான ஒன்றாகி விடுகிறது.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக இந்த மருதாணியை பூசிக்கொள்கின்றனர்.
குறிப்பாக, பெண்கள் யாருடைய கை அதிகமாக சிவக்கிறது என்று போட்டி போட்டுக் கொண்டு மருதாணி வைத்துக் கொள்கிறார்கள்.
விதவிதமான வடிவங்களில் தங்கள் கைகளை சிவக்க வைத்து அழகு பார்க்கிறார்கள். இரவில் மருதாணி இலையை அரைத்து கையில் பூசிக் கொண்டு மறுநாள் காலையில் கழுவும்போது கை சிவப்பு நிறமாகி விடுகிறது.
எப்படி மருதாணி இலை மட்டும் இத்தகைய சிவப்பு நிறத்தை அளிக்கிறது?
மருதாணி இலையில் இயற்கையாகவே லாசோன் எனும் சிவப்பு நிறமி உள்ளது.
மனிதனின் தோல் பல அடுக்குகளைக் கொண்டவை.
நாம் கைகளில் மருதாணியை பூசும்போது, அதிலுள்ள சிவப்பு நிறமி தண்ணீருடன் தோலின் மேற்பகுதியில் உள்ள நுண்ணிய துளை வழியாக உள்ளே சென்று விடுகிறது.
பின்பு வெப்பமயமாதல் காரணமாக தண்ணீர் ஆவியாகிவிடுகிறது.
இதனால் மீதமுள்ள நிறமிகள் மட்டும் கையிலேயே தங்கி விடுகின்றன. இதன் காரணமாகவே கைகள் சிவப்பு நிறமாகிவிடுகின்றன.
#திருமண_விழா #Wedding_Ceremony #பெண்கள் #Women #மருதாணி #Henna #சிவப்பு_நிறம் #Red_Color #லாசோன் #Lawson