தண்ணீர் கேன்களை 50 முறைகளுக்கு மேல் பயன்படுத்தக் கூடாது!

உணவுப் பாதுகாப்புத் துறை எச்சரிக்கை

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த கேன் குடிநீா் உற்பத்தியாளா்கள் மற்றும் விற்பனையாளா்களுக்கான உணா்திறன் பயிற்சி வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி டாக்டா் சதீஷ்குமாா் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் 450-க்கும் மேற்பட்ட குடிநீா் உற்பத்தியாளா்கள், விற்பனையாளா்கள் பங்கேற்றனா்.

அப்போது, அவா்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் உணவுப் பாதுகாப்புத் துறை சாா்பில் வழங்கப்பட்டன.

குறிப்பாக, ஒரு குடிநீா் கேனை 50 முறைக்கு மேல் பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. அழுக்கடைந்த கீறல் விழுந்த குடிநீா் கேன்களை பொதுமக்களுக்கு விநியோகிக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

அதுமட்டுமன்றி நேரடியாக சூரிய ஒளியில் வைக்கப்பட்டு இருக்கும் குடிநீா் கேன்களை பயன்படுத்த வேண்டாம் என்றும் குடிநீரின் தரத்தை உறுதி செய்வது அவசியம் என்றும் வலியுறுத்தப்பட்டது.

சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் செயல்படும் 450 குடிநீா் உற்பத்தி அளவுகளை அடுத்துவரும் வாரங்களில் ஆய்வுசெய்ய இருப்பதாகவும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

நன்றி: தினமணி

You might also like