விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விடுதலைக் கலை இலக்கியப் பேரவையின் சார்பில் சென்னையில் இளவந்திகைத் திருவிழா நடைபெற்றது.
“எங்கள் பெரியார்” என்னும் பாடலை தொல் திருமாவளவன் வெளியிட சென்னை மேயர் பிரியா பெற்றுக் கொண்டார்.
இந்த விழாவில் எழுச்சித்தமிழர் இலக்கிய விருதுகள் சான்றோர்களுக்கு வழங்கப்பட்டு சிறப்பு செய்யப்பட்டது. சிறந்த கவிதை நூலுக்கான விருது கவிஞர் யவனிகா ஸ்ரீராமுக்கும், சிறந்த சிறுகதைக்கான விருது எழுத்தாளர் ஜெயராணிக்கும் வழங்கப்பட்டது.
சிறந்த நாவலுக்கு எழுத்தாளர் ஸ்ரீதர் கணேசன், சிறந்த அபுனைவுக்கு எழுத்தாளர் அ.ராமசாமி, சிறந்த பெண் எழுத்துக்கு புதிய மாதவி, சிறந்த பௌத்த எழுத்துக்கு ஜம்புலிங்கம், சிறந்த சிறார் எழுத்துக்கு நீதிமணி ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
சிறந்த திரைப்படத்துக்கான விருது இயக்குனர் ஜெயக்குமாருக்கும், சிறப்பு திரைப்பட விருது இயக்குனர் எழில் பெரியவேடிக்கும், இளவந்திகை விருது கவிஞர் இளமாறனுக்கும் வழங்கப்பட்டது.
விருது விழாவில் வி.சி.கவின் தொண்டர்களும் இலக்கிய ஆர்வலர்களும் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.