கலை தான் என் உலகம்!

நடிகர் சித்திரசேனன் விளக்கம்

எமது எண்ணங்களையும், உணர்வுகளையும் பிரதிபலிக்கும் இனிய வழிகளில் ஒன்று கலை. அந்த வகையில்  26.02.25 அன்று பிரபஞ்சம்  இனிய கலை உணர்வை பகிர்ந்துகொள்ளும் நாளை உருவாக்கித் தந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

நாட்டுப்புறக் கலைஞர், பாடகர், நடிகர், மேடை நாடகக் கலைஞர், கின்னஸ் சாதனையாளர், கவிஞர், பாடலாசிரியர் எனப் பன்முகத்திறமையாளர்.

‘மஞ்ஞுமல் பாய்ஸ்’, ‘ஏலே’, ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ உள்ளிட்டப் பல படங்களில் நடித்துள்ளார். பல்வேறு விருதுகளை வென்ற உசிலம்பட்டியைச் சேர்ந்த க. சித்திர சேனன். அவர்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

கலை தான் அவருடைய வாழ்க்கை. இறைவன் அவரைப் படைத்தது கலைக்காக தான் என்று சொல்லும் அளவு, அவருக்குள் உள்ளத்திலும், உடம்பிலும் கலை ஒன்றோடு ஒன்றாய்  கலந்திருக்கிறது.

கலைக்காக தன்னுடைய வாழ்கையை அர்ப்பணிக்கும் உன்னத மனிதன் என்று சொல்வதில் மிகையில்லை.

1999-ல் 60 மணி நேரம்  ’வீதி நாடகம்’ நடித்து படைத்த கின்னஸ் சாதனையைப் பற்றி என்னிடம் பகிர்ந்து கொண்டபோது என் உடல் மெய்சிலிர்த்தது.

”கலைஞனாக இருப்பதை நினைத்துப் பெருமை அடைகிறேன். உயிர் போனாலும் இந்த மேடையில் போகட்டும், இதுவே என்னுடைய ஆகப்பெரிய ஆசையும்கூட” என்று சிரித்த முகத்துடன் பகிர்த்துக்கொண்டார் சித்திர சேனன்.

60 மணி நேரம் தொடர்ந்து நாடகம் நடித்தபோது, எப்படித் தூங்காமல் கண் விழித்தீர்கள் என்ற கேள்விக்கு, அவர் சொன்ன பதில் வருத்தத்தையும் நெகிழ்ச்சியையும் ஒருசேரக் கொண்டுவந்தது.

“தூக்கம் வரும்போது உடம்பில் ஊசியால் எங்களை நாங்களே குத்திகொள்வோம்” என்கிறார் அந்த வலிகளைப் பொறுத்துக்கொண்ட பெருமிதத்தோடு.

அதோடு, ’சிறுகாஞ்சொறி’ செடியை உடம்பில் தேய்த்துக் கொள்ளும்போது ஒரு வகையான அரிப்பு எற்படும் என்றும், அந்த நேரம் கடுமையாக இருக்கும். ஆனால், இந்த எரிச்சலால் விழித்துக்கொள்வோம் என்கிறார் புன்னகையோடு.

பின்னர், அவர் பாடிய கிராமியப் பாடல்கள் மற்றும் சினிமாப் பாடல்கள் சிலவற்றை பறையை இசைத்தபடி உருக்கமாகப் பாடிக் காட்டினார்.

இயக்குநர் வெற்றிமாறனின் கலைத்துறைத் தொடர்பான கல்லூரியில் பயிற்றுனராகப் பணியாற்றி வரும் சித்திரசேனன், கவுரவ தமிழாசிரியராகவும் பணியாற்றி வருகிறார். 

சினிமாத் துறையில் சாதிக்க பல இன்னல்களைக் கடந்து வந்திருப்பதாகக் கூறும் இவர், இதன் மூலம் பல வாழ்க்கை அனுபவங்களைக் கற்றுக்கொண்டிருப்பதாகவும், இந்த அனுபவம் தான் எல்லோருக்கும் தேவை என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதையும் பகிர்ந்து கொண்டார்.

எதிர்காலத்தில் எல்லா நடிகர்களுடனும் சேர்ந்து நடிக்க ஆசை. என்றும் அதிலும் ரஜினி, கமல், விஜய்சேதுபதி போன்றோடு இணைத்து நடிக்க விருப்பம் என்ற தனது ஆசையைக் கூறியதோடு, எல்லாவித கதாப்பாத்திரத்திங்களிலும் நடிக்க விருப்பம் என்றும் புதிய கதாப்பாத்திரம் தனக்கு புதிய அனுபவத்தையும், யுத்தியையும் கற்றுக்கொடுக்க கூடியவை என்கிறார் மனம் திறந்து.

அவருடைய  உடலில் நரம்பாக இசை இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். கம்பீரமான குரல் வளம், கிராமியப் பாடல், சினிமா பாடல் என்று இரண்டிலும் சிறப்பாகப் பாடக்கூடிய திறமை உள்ளவர்.

நேர்காணலின் இறுதியில் அருமையான குரலில் கிராமியப் பாடல் ஒன்றைப் பறையிசைக் கருவிப் பயன்படுத்திக் கொண்டே பாடினார். இந்தத் தாய் பாடல் மனதைக் கவரும் வகையில்  இருந்தது. பல இனிய நினைவுகளுடன் இந்தச் சந்திப்பு  நிறைவு பெற்றது.

_ தனுஷா

#க_சித்திர_சேனன் #K_Chitthira_Senan #கலை #Artist #நாட்டுப்புறக்_கலைஞர் #Folk_Artist #பாடகர் #Singer #நடிகர் #Actor #மேடை_நாடகக்_கலைஞர் #Stage_Dramatist #கின்னஸ்_சாதனை #Guinness_Record #கவிஞர் #Poet #பாடலாசிரியர் #Songwriter #மஞ்ஞுமல்_பாய்ஸ் #Manjnumal_Boys #ஏலே #Ale #நண்பகல்_நேரத்து_மயக்கம் #Noon_Day_Drowsiness #வீதி_நாடகம் #Street_Drama #தமிழ்_ஆசிரியர் #Tamil_Teacher

You might also like