சோஷியல் மீடியாவின் தாக்கத்திலிருந்து குழந்தைகளைக் கட்டுப்படுத்த புது செயலி!

நடிகர் மாதவன் பேச்சு

அமெரிக்காவைத் தளமாக கொண்ட Parent Geenee எனும் நிறுவனம், குழந்தைகளின் டிஜிட்டல் பயன்பாட்டின் பாதுகாப்புக் கருதி பெற்றோர்கள் இருந்த இடத்தில் இருந்து குழந்தைகளின் டிஜிட்டல் சாதனங்களைக் கட்டுப்படுத்தும் வகையிலான Parent Geenee என்ற டிஜிட்டல் ஆப்பை அறிமுகப்படுத்தியது.

இந்த டிஜிட்டல் ஆப் நிகழ்ச்சியின் துவக்க விழா சென்னை கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நடிகரும் முதலீட்டாளருமான மாதவன் கலந்துகொண்டு பேரன்ட் ஜீனி டிஜிட்டல் செயலியை துவக்கி வைத்தார்.

புதிய பயன்பாட்டுக்கான இந்த செயலையும் மிகப்பெரிய மற்றும் முதன்மையான இலக்கு கொண்ட நுகர்வோர் சந்தைகளில் இந்தியாவும் உள்ளது.

நடிகர் மாதவன் இந்த முயற்சியில் முதலீட்டாளராகவும், ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் உக்தி சார் பங்குதாரராகவும் இணைந்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் மாதவன், “இந்த செயலி பெற்றோர்களுக்காக தான். குழந்தைகளுக்கு செயலியைப் பற்றி புரியாது. குழந்தைகளை ஒழுங்குபடுத்துவதற்காக இந்த செயலி, கல்வி நிலையங்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தான் இந்த ஆப் முக்கியமானது.

மொபைல் போனை பயன்படுத்தும் நான்கு வயதுக் குழந்தைகளுக்கு செயலியை இன்ஸ்டால் பண்ண அவர்கள் கேள்வி கேட்க மாட்டார்கள். ஆனால், 10, 12 வயது உள்ள குழந்தைகளில் இந்த செயலியை போனில் இன்ஸ்டால் செய்யும்பொழுது அவர்கள் கேள்வி கேட்கலாம் கோபப்படலாம்.

ஆனால், அவர்களை கண்காணிக்க கண்ட்ரோல் பண்ணுவதற்கு வேறு வழி இல்லை. இந்த ஆப் போன் யூஸ் பண்ணாமல் தடுப்பதற்காக அல்ல, செல்போன் பயன்பாட்டில் சமூக வலைத்தளங்கள் தாக்கத்திலிருந்து கட்டுப்படுத்தவே இந்த செயலிகள்.

குழந்தைகள் பரிட்சைக்கு முன்பு ரீல்ஸ் பார்த்து மனம் உடைவது, மக்கள் பேசும் வார்த்தைகளில் தவறாக இருந்தாலோ, நம்மை அட்மயர் பண்ற ஒருவர் பேசும் தப்பான வார்த்தை இருந்தாலும் இது சரி என்று நினைத்துப் பேசுவது, பிஞ்சிலே பழுத்த மாதிரி குழந்தைகள் பேசுவது எல்லாம் சமூக வலைத்தளங்களில் தாக்கம் அதிகமாக இருக்கிறது.

குழந்தைகளைக் குழந்தைகளாக விளையாட வைத்து, சிறிய வயதில் நமக்கு சாப்பிடும் முன்பே தூக்கம் வந்துவிடும். ஆனால், இப்போது அப்படி இல்லை. அதனால் அப்படி பண்ண வேண்டாம் சிறிய குழந்தைகள் சரியாக வளர வேண்டும் என்பதற்காகவே இந்த ஆப்” என்றார்.

You might also like