நூல் அறிமுகம்: கல்வியும் உளவியலும்
எழுதுவது என்பது எளிதான செயலில்லை. நல்ல எழுத்துக்களை உருவாக்குதல் நல்ல உணவைச் சமைத்துப் பரிமாறுவதற்கு நிகரானவை.
எழுத்துலகில் காலூன்றி நிற்பது அரிய கலை. பல நூல்களை உருவாக்கிப் பரிசுகளும் பெற்றவர் முனைவர் பாஞ். இராமலிங்கம். இவர் ‘கல்வியும் உளவியலும்’ என்ற தலைப்பில் இந்நூல் வடிவமைத்துள்ளார்.
சமூகத் தேவைகளில் ஒன்றான கல்விப் பற்றி ஏராளமான கல்வியாளர்கள் காலந்தோறும் எழுதி வருகின்றனர். இந்நூலாசிரியர் கல்விக் கொள்கைப் பற்றிய செய்திகளை உரியவண்ணம் பட்டியலிட்டுத் தந்துள்ளார். கல்வி கற்போனாகிய மாணவன், கல்வியை நல்கும் ஆசான் இருவருக்குமான பண்புகளை இந்நூல் விளக்குகிறது.
*****
நூல்: கல்வியும் உளவியலும்
ஆசிரியர்: முனைவர் பாஞ். ராமலிங்கம்
சாரதா பதிப்பகம்
பக்கங்கள்: 184
விலை: ரூ.57/-