இளம் எழுத்தாளர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

எழுத்தாளர் இந்திரன் பதில்

யாரும் நம்மை அங்கீகரிக்க வேண்டும் என்ற எண்ணம் கலைஞனுக்கு இருக்கவேக் கூடாது. சிந்தனையைத் தூண்டக் கூடிய, வாதங்களை உருவாக்கக்கூடிய, கருத்துக்களை வாதுக்கு அழைக்கக்கூடிய எழுத்துக்களை எழுதுவதுதான் நம் வேலை.

டிஜிட்டல் யுகத்தில் தகவல் குப்பைகளில் இருந்து நமக்கு வேண்டியதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதை கேள்விக்கு உட்படுத்தவேண்டும். வாசகர்களிடம் நல்ல பேர் வாங்க வேண்டும் என எழுதாதீர்கள். வாசகனுக்கு இது பிடிக்கும் என எழுதாதீர்கள்.

உங்களுக்கு பிடித்த பெண்ணைக் காதலித்து மணப்பது போல பிடித்த விஷயத்தை எழுத வேண்டும். உனது கருத்தை எழுது. அது அழுக்கானதாக இருக்கட்டும், அசிங்கமானதாக இருக்கட்டும், ஆபாசமானதாக இருக்கட்டும், தீவிரவாதத் தன்மையுடையதாக இருக்கட்டும். ஆனால் எழுது. அப்போது தான் தமிழில் புதிய தலைமுறைக்கான எழுத்துகள் வெளிவரும்.

இலக்கிய ஆளுமை எனச் சொல்லப்படுபவர்களின் அங்கீகாரம் நமக்குத் தேவை இல்லை என்ற எண்ணம் வர வேண்டும். ஆகவே எழுதி முடித்த பிறகு ‘இது எப்படி இருக்கிறது’ என்று பெரிய எழுத்தாளர் என்று நினைத்து கொள்பவர்களிடம் அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று எண்ணாதீர்கள். எழுத்து நம்மை நாமே நேசிக்க வைக்கும் ஒரு கண்ணாடி. அது “ சூப்பரா எழுதி இருக்கடா நீயி” என என்னும் எண்ணத்தை உங்களுக்கு உருவாக்க வேண்டும். சுயம் சார்ந்த அன்பு ஒரு கலைஞனுக்கு நிச்சயம் தேவை.

– நன்றி: விகடன்

#எழுத்தாளர்_இந்திரன் #இலக்கியம் #எண்ணம் #கலைஞன்  #எழுது #எழுத்து #writer_ indiran #indran #ilakiyam #ennam #kalaigan #writing #script

You might also like