வானேறும் விழுதுகள்: புதிய அலையை உருவாக்கிய புகைப்படங்கள்!

சென்னை விஆர் மாலில் வானேறும் விழுதுகள் என்ற புகைப்படக் கண்காட்சியைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அதை கியூரேட் செய்தவர் சிறந்த புகைப்படங்களுக்காக சர்வதேச விருதுகள் பெற்ற புகைப்படக் கலைஞர் ஜெய்சிங் நாகேஸ்வரன்.

12 புகைப்படக் கலைஞர்களின் மாறுபட்ட கோணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத் தொகுப்பு. வழக்கமாக ஏதாவதொரு கேலரியில்தான் கண்காட்சி நடைபெறும்.

இவற்றை மக்கள் அனைவரையும் பார்க்கவைத்துப் பழக்கவேண்டும் என்ற நோக்குடன் நவீனமான ஒரு மாலில் ஏற்பாடு செய்திருப்பது பாராட்டுக்குரியது.

அதுமாதிரியான சூழலில் கலையை ரசிப்பதும் தரிசிப்பதும் புதுமையான அனுபவம்.

இக்கண்காட்சி பற்றி வைக்கப்பட்டுள்ள அறிவிப்பில், “திராவிட, தலித்திய தத்துவங்களை உள்வாங்கி, அவற்றை முன்னெடுக்கும் இக்கண்காட்சி பன்மைத்துவத்தைப் போற்றி ஒற்றைமயப்படுத்தும் எண்ணப்போக்கை மறுக்கிறது. தமிழின் புதிய அலை அனைவருக்கும் உரித்தானது. தமிழின் புதிய அலை என்பதே நீங்களே” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜெய்சிங், பாலிவுட்டில் ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரனிடம் பணியாற்றியவர். சர்வதேச நாடுகளின் புகழ்பெற்ற புகைப்படக் கண்காட்சிகளில் பங்கேற்றவர். தேசிய, சர்வதேச விருதுகளையும் ஃபெல்லோசிப்களையும் பெற்றிருக்கிறார்.

முதன்முறையாக அவர் க்யூரேட் செய்த புகைப்படக் கண்காட்சி. புகைப்படங்கள் பார்வைக்கு வைக்கப்பட்ட விதமே கண்ணையும் கருத்தையும் கவர்கிறது.

You might also like