பாட்டி தனது இறுதிக்காலம் வரை தினமும் உச்சரித்த பெயர் ’அம்பேத்கர்’!

அன்னை மீனாம்பாளின் பேத்தி சபீதா ஐ.ஏ.எஸ்

எங்கப் பாட்டி மீனாம்பாளை குடும்பத்துல எல்லோரும் ரொம்ப மதிப்போம். அவங்கக் கண்ணுல குளுக்கோமா பாதிப்பு ஏற்பட்டபோதும் சமூகத்துக்காக ஓய்வே இல்லாம உழைச்சாங்க.

ஒருகட்டத்துல முழுமையா பார்வை இல்லாம போய்டுச்சு. இறப்பதற்கு முன்பு 30 வருடங்களா இரண்டு கண்களிலும் பார்வை இல்லை. அதை பின்னடைவா கருதாம உதவின்னு தேடி வர்றவங்களுக்காக முதல்வர், ஜனாதிபதி, பிரதமர்னு தினமும் கடிதம் அனுப்பி வைப்பாங்க.

நான் அப்போ பத்தாவது படிச்சுக்கிட்டிருந்தேன். அவங்க சொல்ல சொல்ல நான் கடிதம் எழுதுவேன். முடிச்சதும் கையெழுத்துப் போடுவாங்க.

இப்படி பாட்டி எல்லோருடைய வாழ்க்கையையும் எப்படி மாற்றினாங்கன்னு கண்கூடா பார்த்திருக்கோம்.

கண் தெரியாத சூழலில்கூட இப்படி உழைக்கிறாங்களே ‘ரொம்ப கிரேட்டான பாட்டி’ன்னு ஆச்சர்யப்படுவோம்; பிரமிப்போம்.

ஆனா, அப்படிப்படிப்பட்ட பாட்டியே ஒருவரை எப்போதும் ‘கிரேட் பர்சனாலிட்டி.. மாமனிதர்’னு சொல்லிக்கிட்டே இருந்தாங்கன்னா, அவர் எப்பேர்பட்ட கிரேட் கிரேட் பர்சனாலிட்டியா இருந்திருப்பார்? அவர்தான் பாபாசாகேப் அம்பேத்கர்.

பாட்டி தனது இறுதிக்காலம் வரை தினமும் உச்சரித்தது அவரதுப் பெயரைத்தான். நான் ஐ.ஏ.எஸ் ஆனதற்கு காரணமும் அம்பேத்கரின் கொள்கைதான்!”

  • விகடனின் ’எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தகத்திற்காக நான் எடுத்த விரிவான பேட்டியில், அன்னை மீனாம்பாள் சிவராஜ் பேத்தி சபீதா ஐ.ஏ.எஸ்.

– நன்றி: தோழர் வினி சர்ப்பனா

You might also like