5 லட்சம் பெண் தொழில் முனைவோரை உருவாக்கப் புதிய திட்டம்!

2025 – 26 ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் உரையின் முக்கியம்சங்கள்!

எதிர்கட்சிகளின் அமளிக்கு இடையே, 2025 – 26ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் உரையை தெலுங்கு கவிதையை சுட்டிக்கட்டித் தொடங்கினார் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

நிதியமைச்சர் பட்ஜெட் உரையை வாசித்தபோதே சமாஜ்வாதி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படியாக இன்று நடந்த பட்ஜெட்டில், என்னென்ன திட்டங்கள் அறிவிக்கப்பட்டன என்பதுபற்றி இங்கே விரிவாக பார்க்கலாம்…

“உலகின் பெரிய பொருளாதார நாடுகளின் வளர்ச்சியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. அனைவருக்குமான வளர்ச்சி என்ற நோக்கத்தில் அரசு செயல்படுகிறது. நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வளர்ச்சியை ஊக்குவிக்க நடவடிக்கை இனியும் மேற்கொள்ளப்படும். அந்த வகையில்,

உலகத்தின் உணவு உற்பத்தி மையமாக இந்தியா வளர்ந்துள்ளது. குறிப்பாக நாட்டின் வளர்ச்சிக்கு, விவசாயம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆகவே வேளாண் உற்பத்தியை மேற்கொண்டு அதிகரிக்க மாநில அரசுகளுடன் கூட்டணியாக புதிய திட்டமிடப்பட்டுள்ளது.

உள்நாட்டிலேயே தேவையான பருப்புகளை உற்பத்தி செய்யவும் திட்டம். பருப்பு உற்பத்தியில் 6 ஆண்டுகளில் தன்னிறைவு அடைய இலக்கு நிர்ணயித்து அரசு செயல்படுகிறது.

வரி, மின்சாரம், சுரங்கம், நிதி சீர்திருத்தம் உள்ளிட்ட 6 அம்சங்களுக்கு முக்கியத்துவம் இனி அளிக்கப்படும்.

1.70 லட்சம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் திட்டங்கள் கொண்டுவரப்படும்.

பீகார் மாநில விவசாயிகள், கூட்டுறவு அமைப்புகளுக்கான புதிய திட்டம் உள்ளது. பழங்கள் மற்றும் காய்கறிகளின் உற்பத்தியை பெருக்கவும் திட்டம். உளுந்து, துவரம் பருப்பு ஆகியவற்றின் உற்பத்தியை நெருக்க திட்டம்.

சிறப்பான சாகுபடுக்கு ஏற்ற விதைகளை நாடு முழுவதும் விநியோகிக்க புதிய திட்டம்.

இந்திய கடற்பரப்பில் மீன் வளத்தை அதிகரிக்க புதிய திட்டம்.

அசாமில் யூரியா உற்பத்தித் தொழிற்சாலை அமைக்கப்படும்.

பருத்தி உற்பத்தியை அதிகரிக்க புதிய திட்டம்.

சிறந்த வகைப் பருத்தி சாகுபடியை ஊக்குவிக்க திட்டம்.

தபால் நிலையங்கள் மூலம் ஊரகப் பகுதிகளில் வளர்ச்சியை ஊக்குவிக்க திட்டம்

யூரியா உற்பத்தியை அதிகரிக்க அசாமில் புதிய தொழிற்சாலை அமைக்கப்படும்.

சிறந்த வகைப் பருத்தி சாகுபடி ஊக்குவிக்கப்படும்.

கிசான் கிரெடிட் கார்டு மூலம், 7.7 கோடி விவாசாயிகளுக்கு குறுகியகால கடன் பெற நடவடிக்கை.

சிறு, குறு நிறுவனங்கள் இந்தியாவை உற்பத்தி மையமாக உருவாக்கி வருகின்றன.

சிறு நிறுவனங்கள் கூடுதல் கடன் வழங்கப்படும். புத்தாக்க நிறுவனங்களுக்கு கடன் வட்டியில் சலுகைகள் அறிவிப்பு.

கிராமப்புறங்களில் 1.5 லட்சம் தபால் நிலையங்கள் அமைக்கப்படும். பட்டியலின பெண்கள் சுயதொழில் மூலம் முன்னேற ரூ. 2 கோடி வரை கடன் வழங்க சிறப்புத்திட்டம்.

முதல்முறை தொழில் தொடங்கும் பட்டியலின பெண்களுக்கு சிறப்பு திட்டம் அறிமுகம்.

காலணிகள் உற்பத்தியை பெருக்க திட்டம்.

கிசான் அட்டை மூலம் ரூ. 5 லட்சம் வரை கடன் வசதி. புத்தாக்க நிறுவனங்களுக்கு கடன் வட்டியில் சலுகைகள் அறிவிப்பு.

பீகாரில் தேசிய உணவு தொழில் நுட்பம் & மேலாண்மை பயிலகம் தொடங்கப்படும்.

உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொம்களை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை.

சூரிய ஒளி மின்சாரத்திற்கான கருவிகளின் உற்பத்தியை ஊக்குவிக்க புதிய திட்டம்.

நாடு முழுவதும் மேல்நிலைப்பள்ளிகள், சுகாதார நிலையங்களுக்கு பாரத் நெட் மூலம் பிராட்பேண்ட் வழங்கப்படும்.

இந்தியாவில் அங்கன்வாடிகள் மூலம் 8 கோடி குழந்தைகள் பயன்பெறுகின்றன. தொடர்ந்து அங்கன்வாடி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவுகள் அதிகரிக்க நடவடிக்கை.

மாணவர்களுக்கான பாடங்களை தாய்மொழியிலேயே டிஜிட்டல் முறையில் வழங்க திட்டம்.

புத்தாக்க நிறுவனங்களை ஊக்குவிக்க ரூ.10,000 கோடி நிதி ஒதுக்கீடு.

விவசாயம் உள்ளிட்ட 3 முக்கிய துறைகளின் தேவையை பூர்த்திசெய்ய ஏ.ஐ. தொழில்நுட்ப மையங்கள்.

அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் புற்றுநோய் சிகிச்சை மையம்.

மருத்துவப் படிப்புக்கு கூடுதலாக பத்தாயிரம் இடங்கள் உருவாக்கப்படும். குறிப்பாக அடுத்த 5 ஆண்டுகளில் மருத்துவப் படிப்புக்கு 75 ஆயிரம் கூடுதல் இடங்கள் உருவாக்கப்படும். 5 ஆண்டுகளில் 5 லட்சம் பெண் தொழில் முனைவோரை உருவாக்க புதிய திட்டம்.

பொருள் விநியோக சேவையில் உள்ள டெலிவரி ஊழியர்களுக்கு மின்னனு பதிவு அடையாள அட்டை.

டெலிவரி ஊழியர்களுக்கு காப்பீடு வசதி.

ஒரு கோடி பகுதிநேர பணியாளர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்படும்.

இல்லங்களுக்கு குடிநீர் ஜல்ஜீவன் திட்டம் 2028 ஆம் ஆண்டு வரை நீட்டிப்பு. நாட்டில் உள்ள அனைத்து இல்லங்களுக்கும் குழாய் மூலம் வழங்கப்படும்.

200 புற்றுநோய் சிகிச்சை மையங்களை அமைக்க திட்டம். நகர்ப்புறங்களில் கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள ரூ 1 லட்சம் கோடி நீதி ஒதுக்கீடு.

சிறிய மற்றும் நடுத்தர அணு உலைகளை உருவாக்க ரூ. 20 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு.

ரூ. 500 கோடியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப கல்வி மையம் அமைக்கப்படும்.

அணு உலை மூலம் மின்சார உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை.

சிறு நகரங்களுக்கான விமான சேவைகளை அதிகரிக்க உடான் திட்டத்தில் புதிய அம்சங்கள்.

2047 க்கு 100 ஜிகாவாட் அணுமின் உற்பத்தி செய்ய திட்டம். அரசுப் பள்ளிகளில் 50,000 டிங்கரிங் ஆய்வகங்கள் அடுத்த 5 ஆண்டுகளில் அமைக்கப்படும்.

பீகார் மாநில தலைநகர் பாட்னாவின் விமான நிலையத்தை விரிவாக்கம் (பீகாரில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது).

பீகாரில் மாநில விவசாயிகள், கூட்டுறவு அமைப்புகளுக்கான புதிய திட்டம். உடான் திட்டம் மூலம் மேலும் 120 இடங்களுக்கு விமான சேவை மாநில அரசுடன் இணைந்து புதிதாக 50 சுற்றுலா மையங்கள் உருவாக்கப்படும்.

ஏழைகளுக்கான 40 ஆயிரம் குடியிருப்புகள் உருவாக்கப்படும்.

விண்வெளித்துறை வளர்ச்சிக்காக தேசிய அளவில் ஜியோ ஸ்பேஸ் இயக்கம் உருவாக்கப்படும்.

தபால் துறை, சரக்குகளைக் கையாளும் துறையாக மாற்றப்படும்

மாதம் ரூ.1 லட்சம் வரை ஊதியம் வாங்குவோர் இனி வருமானவரி கட்டத் தேவையில்லை; தனிநபர் வருமான வரிக்கான உச்சவரம்பு ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.12 லட்சமாக அதிகரிப்பு

சொந்த வீடுகளுக்கு வரிச் சலுகைகள் பெறலாம். வீட்டு வாடகைக்கான TDS உச்ச வரம்பு ரூ.6 லட்சமாக அதிகரிப்பு

200 புற்றுநோய் சிகிச்சை மையங்கள் அமைக்க திட்டம் புற்றுநோய் உள்ளிட்ட உயிர்காக்கும் 36 மருந்துகளுக்கு இறக்குமதி வரி தள்ளுபடி” என்று அறிவித்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

இதற்கிடையே பட்ஜெட் உரையில் திருக்குறளை மேற்கோள்காட்டிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.

அவர் கூறிய திருக்குறள்:

வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்

கோல்நோக்கி வாழுங் குடி.

இதன் மு.வரதராசனார் விளக்கம்: உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை நம்பி வாழ்கின்றன. அதுபோல் குடிமக்கள் எல்லாம் அரசனுடைய செங்கோலை நோக்கி வாழ்கின்றனர் என்று விளக்கமளித்தார்.

You might also like